ரூ. 9 கோடிக்கே புயலுக்கு தடை, அப்போ ரூ. 20 கோடிக்கு...?
சென்னை: தயாரிப்பாளர் நியாயம் கேட்பதால் விரல் வித்தை நடிகருக்கு நடிக்க தடை விதிக்கப்படுமா?
விரல் வித்தை நடிகர் இளம் இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்தபோது அவர் படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு பிபி ஏற வைத்தார்.
ஒரு வழியாக டூப் வைத்து படத்தை முடித்து வெளியிட்டார்கள். படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் தயாரிப்பாளருக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

தடை
தனக்கு நஷ்ட ஈடு தரும் வரை விரல் வித்தை நடிகர் புதுப்படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் மீண்டும் புகார் அளித்துள்ளார். நடிகரோ புதுப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள கெட்டப்பை மாத்தி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். அவர் வெளிநாட்டில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம்
தயாரிப்பாளரின் புகாரை ஏற்று அவருக்கு நியாயம் கிடைக்கும் வரை விரல் வித்தை நடிகர் புதுப்படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிளாப் படத்தை அடுத்து விரல் வித்தை நடிகர் ரொம்பவே பிசியாகிவிட்டார். கை நிறைய படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் தான் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

படங்கள்
நடிகர் திருந்திவிட்டார் என்று நம்பி அவரை வைத்து இயக்குனர்கள் பட வேலைகளை துவங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த புகார் பஞ்சாயத்து அவர்களுக்கு கலக்கத்தை அளித்துள்ளது. அந்த தயாரிப்பாளருக்கு நாமம் போட்டது போன்று நமக்கும் நடந்துவிடக் கூடாது என்பதே விரல் வித்தை நடிகரை நம்பி பணம் போட்டுள்ளவர்களின் பிரார்த்தனை.

ரூ. 20 கோடி
ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கொடுக்க மறுத்து அடம்பிடித்த நகைச்சுவை நடிகருக்கே படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ. 20 கோடி நஷ்டஈடு அளிக்கக் கோருகிறார் விரல் வித்தை நடிகரை வைத்து படம் தயாரித்தவர். அப்படி என்றால் நகைச்சுவை நடிகர் நிலைமை தான் விரல் வித்தைக்குமா?


Click it and Unblock the Notifications











