For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மனசுக்குள்ள அந்த ஆசை இருக்காம்.. அதை நோக்கியே எல்லா காய்களையும் அந்த நடிகர் நகர்த்தி வருகிறாராம்!

  By Staff
  |

  சென்னை: டாப் நடிகராக இருந்து வரும் அந்த பிரபல நடிகருக்கு மனசுக்குள் அரசியல் ஆசை இருப்பதாக கூறப்படுகிறது.

  மக்கள் செல்வாக்கை பெற ஏகப்பட்ட முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறாராம்.

  மேலும், அதிரடியாக கருத்துக்களை எந்தவொரு அச்சமும் இன்றி எடுத்து வைக்க காரணமும் அதுதான் என்கின்றனர்.

  பல கோடி கொட்டியிருக்கோம்.. அப்படியே எப்படி விட முடியும்.. இந்தியன் 2 விவகாரத்தில் லைகா அதிரடி!பல கோடி கொட்டியிருக்கோம்.. அப்படியே எப்படி விட முடியும்.. இந்தியன் 2 விவகாரத்தில் லைகா அதிரடி!

  அரசியலும் நடிகர்களும்

  அரசியலும் நடிகர்களும்

  கோலிவுட்டில் நடிகர் ஆகி விட்டாலே அடுத்த கட்டம் அரசியல் தான் என்கிற நிலை பல காலமாக எழுதப் படாத சட்டமாகவே உள்ளது. சினிமா மூலம் ஈஸியாக ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் புகழை சம்பாதித்து அரசியல் தலைவர்களாக மாறி ஆட்சியை பிடித்தவர்கள் இங்கே பல பேர் உள்ளனர்.

  புலி வருது

  புலி வருது

  நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என ஊருக்குள் புலி வருது புலி வருது என பல காலமாக மக்களையும் தனது ரசிகர்களையுமே ஏமாற்றி உச்ச நடிகர் ஒருவர் தனது படங்களை ஓட வைத்து வந்தார். ஆனால், கடைசியில் தனக்குள் உறங்கிக் கிடக்கும் அந்த மிருகம் என்றுமே எந்திரிக்காது என டாட் வைத்து முடித்து விட்டார்.

  படு தோல்வி

  படு தோல்வி

  அவர் தான் வரலை.. நாம வந்து இங்கே மாற்றத்தை கொண்டு வருவோம் என களமிறங்கிய இன்னொரு உச்ச நடிகரை மக்கள் வேணவே வேணாம் என முடிவு கட்டி படு தோல்வியை கொடுக்க கட்சியில் இருந்தவர்களும் ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது என வரிசையாக கம்பியை நீட்டி விட்டனர்.

  முதலுக்கே மோசடி

  முதலுக்கே மோசடி

  அதிகப்படியான ரசிகர்கள் செல்வாக்கு வைத்துக் கொண்டிருக்கும் அந்த மாஸ் நடிகர் அடுத்ததாக அரசியலில் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏகப்பட்ட வழக்கு மேட்டர்களில் சிக்கி அந்த பக்கம் தலையை காட்டவே கூடாது என்கிற அளவில் மாஸ் நடிகருக்கும் பலத்த அடி விழுந்து விட்டது.

  நல்லது செய்றேன்

  நல்லது செய்றேன்

  அரசியலுக்கு வரேன்னு 60 வயதில் சொல்லி விட்டு நான் வந்துட்டேன் மக்கள் ஓட்டுப் போடல என புலம்பித் தள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விஷயங்களை செய்து, நாலு பேருக்கு நல்லது செஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக இமேஜை உயர்த்திக் கொண்டு வந்தால் அரசியல் நாற்காலி தானே தேடி வரும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு அந்த பிரகாச நடிகர் காய்களை நகர்த்தி வருகிறார் என கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  எதிர்ப்பு குரல்

  எதிர்ப்பு குரல்

  நடிச்சோமா, காசு சம்பாதிச்சோமா.. அடுத்த அடுத்த மொழிப் படங்களில் பிசியானோமா என இல்லாமல் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தியும் சினிமா மூலமாகவும் அதே போன்ற கருத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக விதைத்து வருகிறார் அந்த பிரகாச நடிகர்.

  படங்களில் அரசியல்

  படங்களில் அரசியல்

  ஒல்லி நடிகரின் அண்ணன் படத்திலேயே தமிழ்நாட்டு சிம்மாசனத்தை பிடித்து விட்டது போல நடித்திருந்தார் அந்த பிரகாச நடிகர். மேலும், அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள மூன்று படங்களிலும் பயங்கர அரசியல் நெடி இருக்கும் என்பது அதன் டைட்டில்களிலேயே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

  முதல் குரல்

  முதல் குரல்

  எந்தவொரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் மற்ற முன்னணி நடிகர்களை போல அமைதி காக்காமல் மனதுக்கு பட்டதை உடனடியாக முதல் குரலாக பதிவு செய்து வருகிறார். இவரது இந்த அதிரடி செயல் பல அரசியல் கட்சிகளுக்கும் இவர் மீதான எதிர்ப்பையும் வளர்த்து வருகிறது. ஆனால், அந்த எதிர்ப்பு தான் தனக்கு தற்போதைக்கு தேவை என்றும் பிரகாச நடிகர் பிளான் பண்ணி வருவதாக கூறப்படுகிறது.

  அடுத்த கட்டம்

  அடுத்த கட்டம்

  சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து விட்ட பிரகாச நடிகர் அடுத்த கட்ட நகர்வாக அரசியலில் நிச்சயம் களம் காண்பார் என்பது திட்ட வட்டமாக தெரிவதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது மன ஓட்டமும் அதை நோக்கியே இருப்பது அவர் தேர்வு செய்யும் படங்களிலும் பிரதி பலித்து வருகின்றன. மேலும், அவர் வெளிப்படுத்தும் எதிர்ப்புகளிலும் வெளிப்பட்டு வருகின்றன. தன்னை ஒரு சமூக போராளியாக காட்டி வருவதே அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கான முயற்சி தான் என அவர் மீது விமர்சனங்களும் எழத் தொடங்கி இருக்கின்றன. சீக்கிரமே அதற்கான அறிவிப்புகளும் வரும் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Top actor also wish to become a great politician soon he will announce about his political entry gossip circulates in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X