சர்ச்சை இயக்குனர் படத்தில் நடிப்பாரா உச்ச நடிகர்?
Recommended Video

சென்னை: உச்ச நடிகர் தனது மனதை மாற்றிக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு மேலும் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறார் உச்ச நடிகர். தற்போது நடித்து வரும் படத்தை முடித்த வேகத்தில் அடுத்த பட வேலைகளை துவங்க நினைக்கிறார்.
இதற்காக அவர் ஒரு பிரபல இயக்குனரை அணுகி கதை கூறுமாறு தெரிவித்துள்ளார்.

கதை
உச்ச நடிகரே தன்னை அழைத்த மகிழ்ச்சியில் அந்த திறமையான இயக்குனரும் கதையை தயார் செய்யும் வேலையில் இறங்கிவிட்டார். இந்நிலையில் தான் அந்த இயக்குனர் கதை தொடர்பான சர்ச்சையில் சிக்கிவிட்டார். அந்த சர்ச்சை பற்றி தான் கோடம்பாக்கத்தில் ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சனை இல்லை
இயக்குனர் சிக்கிய சர்ச்சையில் இருந்து அவர் பட ஹீரோ தள்ளியே இருக்கிறார். இந்த விஷயம் எல்லாம் தெரிந்த பிறகும் உச்ச நடிகர் அந்த இயக்குனரிடம் கதை கேட்டு நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரச்சனையே கதை தான் என்பதால் உச்ச நடிகர் சுதாரித்துக் கொள்வாரா இல்லை இயக்குனரை அழைத்து விளக்கம் கேட்டு நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கவலை
உச்ச நடிகர் புதுப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சீக்கிரம் அரசியலுக்கு வா தலைவா என்று அழைக்கிறார்கள். அரசியலில் அவசரம் வேண்டாம், வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக மாஸாக வருவேன் என்கிறார் உச்ச நடிகர். அவர் சொல்வதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார் என்பது ரசிகர்களுக்கு தெரியாதா என்ன.

மீண்டு வா
இயக்குனர் சர்ச்சையில் சிக்கியதை பார்த்த அவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாங்கள் உங்களை நம்புகிறோம் சார், மீண்டு வாங்க. நிச்சயம் உங்களால் முடியும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











