இயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்?
சென்னை: ஒரு புதுப்பட அறிவிப்பை பார்த்த பிறகு பிரபலங்களும், ரசிகர்களும் இப்படித் தான் பேசிக் கொள்கிறார்கள்.
தன்னுள் பல திறமைகளை வைத்திருப்பவர் அந்த நடிகர். திறமை இருக்கும் அளவுக்கு சேட்டையும் செய்து வந்தார். அதனாலேயே கெட்ட பெயர் எடுத்து தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார்.

தற்போது தான் கொஞ்சம் சேட்டையை குறைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரை வைத்து மாஸாக படம் எடுக்கப் போவதாக இயக்குனர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறு இல்லை. ஆனால் அவரோ கோபக்காரர், சட்டு சட்டுன்னு கோபப்பட்டு கத்துவார், நடிகரோ சேட்டைக்காரர். இந்த இருவரும் சேர்ந்து எப்படி படம் பண்ண முடியும் என்று அவர்களை பற்றி தெரிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
அறிவிப்பு அறிவிப்போடு முடிந்துவிடுமா இல்லை படப்பிடிப்பு நடந்து படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











