அப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா? பரபரக்கும் கோலிவுட்!

சென்னை: உச்ச நடிகரின் உடல் நிலை சீராக இல்லாத வதந்திகள் கொஞ்ச நாளாவே வலம் வந்து கொண்டிருந்தன.

இப்போ, அந்த ட்வீட் என்னோடது இல்லை. ஆனால், அதில் உள்ள விஷயங்கள் உண்மை என அவரே சொல்லி இருப்பதால், அவர் நடிப்பில் மெகா கூட்டணியோடு உருவாகி வரும் அந்த படத்திற்கு சிக்கல் ஆகி உள்ளது.

உச்ச நடிகருக்கு பதிலாக டாப் நடிகரை வைத்து அந்த படத்தை எடுக்கலாமா? என்றும் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வயசாகிடுச்சு

வயசாகிடுச்சு

ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த அந்த உச்ச நடிகருக்கு இப்ப ரொம்பவே வயசாகிடுச்சு. தொடர்ந்து உடலை வருத்தி ஏகப்பட்ட படங்களிலும் நடித்து வந்த அவர், அடுத்ததாக ஒரு சில படங்களிலும் கமீட் ஆகி இருக்கிறார். ஆனால், லாக்டவுனுக்கு பிறகு ரொம்பவே அவர் உடல் நிலை முன்பு போல ஒத்துழைக்க மறுப்பதாக வதந்தி ஒன்று தீயாக பரவியது.

இல்லை ஆனால் இருக்கு

இல்லை ஆனால் இருக்கு

என் பேர்ல நான் சொன்னதா வரும் அந்த தகவல் வதந்தி என தெளிவுப்படுத்திய அந்த உச்ச நட்சத்திரம். ஆனால், அதில் கூறப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் உண்மை தான் என்று கூறி தனது ரசிகர்களை சோகக் கடலில் ஆழ்த்தி விட்டார். உச்ச நடிகர் இப்போ எப்படி இருக்கார் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் உள்ளனர்.

வேற ரூட்

வேற ரூட்

சினிமாவை விட்டு வேற ஒரு புது ரூட்டுக்கு அந்த உச்ச நடிகர் வருவார் என காத்திருந்த தொண்டர்களும் இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என்கிற நிலைக்கு தங்களை தாங்களே தேற்றிக் கொண்டு வருகின்றனர். அந்த பக்கம் வருவதில் பிரச்சனை இருக்கு என மறைமுகமாக சொல்லிவிட்ட, அந்த நடிகருக்கு இந்த பக்கமும் இப்போ பிரச்சனை இருக்கிறதாம்.

கை மாறிய படம்

கை மாறிய படம்

உச்ச நடிகரின் நண்பரும் போட்டி நடிகருமான வேர்ல்ட் நடிகர் தயாரிப்பில் உச்ச நடிகர் நடிக்க இருந்த அந்த படமும் அதனால் தான் கை மாறி போய்விட்டதாகவும். மாஸ் நடிகரை வைத்து படம் இயக்கி உள்ள அந்த இயக்குநர் இயக்கத்தில் இப்போ வேர்ல்ட் நடிகர் நடிப்பதும் அதனால் தான் என தகவல்கள் பரவி வருகின்றன.

அப்போ அந்த படம்

அப்போ அந்த படம்

ஏகப்பட்ட ஹீரோயின்களை வைத்து அந்த ‘வி' பட இயக்குநர் இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் தொடங்காத நிலையில், உச்ச நடிகர் அந்த படத்தில் தொடர்ந்து நடிப்பாரா? மாட்டாரா? என்கிற சந்தேகமும் தற்போது கோலிவுட்டில் பில்லியன் டாலர் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

டாப் நடிகரை வைத்து

டாப் நடிகரை வைத்து

ஒரு வேளை உச்ச நடிகரால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் வர முடியவில்லை என்றால், டாப் நடிகரை வைத்து அந்த படத்தை முடிக்கவும் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே அந்த இயக்குநர் இயக்கத்தில் ஏகப்பட்ட படங்களில் டாப் நடிகர் நடித்துள்ளதால், இந்த படத்திலும் நடிக்க அவர் சம்மதிப்பார் என கருதப்படுகிறது.

கண்டிப்பா முடிச்சுக் கொடுப்பார்

கண்டிப்பா முடிச்சுக் கொடுப்பார்

ஆனால், அப்படி எல்லாம் எடுத்துக் கொண்ட காரியத்தை விட்டு விட மாட்டார் உச்ச நடிகர் என்றும், கண்டிப்பா அந்த படத்தை முடித்துக் கொடுப்பார் என்றும் நடிகர் தரப்பில் இருந்து தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்கத்திற்கு தகவல் போயுள்ளதாம். மற்றவர்களை வைத்து ஷூட்டிங் தொடங்குங்க, சீக்கிரமே அவர் நடிக்க வருவார் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X