மீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா?

பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே வெற்றி நடிகர் தயக்கம் காட்டுகிறார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

அந்த நடிகைக்காக மீடியாவை கண்டால் பயந்து ஓடும் நடிகர்- வீடியோ

சென்னை: பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே தயக்கம் காட்டுகிறாராம் வெற்றி நடிகர். இதனால் அவர் நடித்த படவிழாக்களிலும் கலந்து கொள்வதில்லை.

சொல்லிக் கொள்வது போல் கைவசம் படம் இல்லையென்றாலும், நடிகருக்கென்று ரசிகர் வட்டம் உள்ளது. இதனால் அவரது படம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் காணப்படுகிறது. ஆனால், படவிழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து, தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார் நடிகர்.

Winning actor avoids media people

அவர் நடித்த பட புரோமோசன் வேலைகளுக்குக்கூட வர மறுப்பதால், தயாரிப்பாளர்கள் டென்சன் ஆகின்றனர். ஏன் அவர் புரோமோசன் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதில்லை என்றால், காரணம் மீடியாக்கள் தான் என்கின்றனர் விசயம் தெரிந்தோர்.

பட விழாக்களுக்கு பத்திரிகையாளர்கள் அதிகளவில் வருவதால், சமயங்களில் கேள்விகள் படத்தை தாண்டியும் அமைந்து விடுகிறது. அப்படியாக அங்காடி நடிகைப் பற்றியும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்பதால் தான் நடிகர் படவிழாக்களை புறக்கணிக்கிறார் என்கிறார்கள்.

ஏனெனில் நீண்ட கால நண்பர்களாக இருக்கும் வெற்றி நடிகரும், அங்காடி நடிகையும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது நீண்டகாலமாக இருந்து வரும் வதந்தி. மீடியாக்களிடம் வெளிப்படையாக தங்கள் காதலை இருவரும் போட்டுடைக்காவிட்டாலும், இலைமறை காயாக அவர்கள் விசயம் ஊரறிந்தது தான்.

இதனால் தான் தேவையில்லாமல் பத்திரிகையாளர்கள் மத்தியில் வார்த்தையை விட்டு, சர்ச்சையில் சிக்கி அம்மணியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பவில்லையாம் நடிகருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X