இது என்னங்க அநியாயம்.. அவருக்கு அத்தனை கோடி.. எனக்கு இவ்ளோ கம்மியா? கொதித்தெழுந்த பிரபல நடிகர்!

சென்னை: அந்த பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்க வேர்ல்ட் நடிகருக்கு பேசப்பட்டு இருக்கும் தொகையை விட அந்த இந்தி நடிகருக்கு 10 மடங்கு அதிகம் என்ற செய்தி வெளியானதில் இருந்து அப்செட் ஆகி உள்ளாராம் வேர்ல்ட் நடிகர்.

மார்க்கெட் ரீதியாக பார்த்தாலும், அதற்கென்று இவ்வளவு கம்மியா கொடுப்பது நியாயமற்ற செயல் என்றும் நிர்வாகத்திடம் கோபித்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வலம் வருகின்றன.

இளம் நடிகைகளே அதிக அளவில் நிகழ்ச்சிக்கு நுழைய பணம் கேட்டு டீலிங் பேசும் போது, எனக்கு மட்டும் இப்படி ஓரவஞ்சனை செய்வது நியாயமா என்றும் கேட்டுள்ளாராம்.

இன்னொரு தபா

இன்னொரு தபா

இந்த வாட்டி அந்த பிரபல நடிகர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்றே வழக்கம் போல, பலரும் அவரது பக்தர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், வர லக்‌ஷ்மியை வேண்டாம்னு எப்படி விடுவது என்கிற ரீதியில் இன்னொரு தபாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள களம் இறங்கி விட்டார்.

பல நூறு கோடிகள்

பல நூறு கோடிகள்

இதே நிகழ்ச்சியை இந்தியில் தொகுத்து வழங்கும் அந்த மான் நடிகருக்கு பல நூறு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதை அறிந்து பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தானர். நாமும் அதே வேலையைத்தான் செய்கிறோம். ஆனால், நமக்கு மட்டும் ஏன் அதள பாதாளத்தில் சம்பளம் கொடுக்கின்றனர் என்ற கோபம் அந்த நடிகருக்கு இயல்பாகவே ஏற்படத் தானே செய்யும்.

நிர்வாகத்திடம் கேட்டே விட்டார்

நிர்வாகத்திடம் கேட்டே விட்டார்

இப்படி நீங்க பண்றது கொஞ்சம் கூட நியாயம் இல்ல, எந்த விதத்தில அந்த நடிகரோட நான் குறைஞ்சிப் போய்ட்டேன், எதுக்காக எங்களுக்கு கம்மியா விலை பேசுறீங்க என சட்டையை பிடித்து கேட்காத குறையாக கேட்டே விட்டுள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இளம் நடிகைகளுக்கு

இளம் நடிகைகளுக்கு

மேலும், இளம் நடிகைகளை நிகழ்ச்சியில் பிடித்துப் போட பணத்தை வாரி இரைத்து செலவு செய்றீங்க, எனக்கு மட்டும் பழைய படியே அதே சம்பளம் என்றால், எப்படி என வேர்ல்ட் நடிகர் தனது உரிமையை கேட்க, நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகம், அப்டியெல்லாம் இல்லைங்க, மார்க்கெட் ரேட் தான் கொடுக்கிறோம். எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடாதீர்கள், கூட குறைய பார்த்து பண்ணிக்கலாம் என கூலாக்கி இருக்காங்களாம்

பாவம் அந்த இயக்குநர்

பாவம் அந்த இயக்குநர்

முதல் சீசனில் அறிவித்த படத்தின் ஷூட்டிங்கை இன்னமும் முடிக்க முடியாமல், பாவம் அந்த இயக்குநர் வேறு எப்போ ஷூட்டிங்கை நடத்தலாம். என் படத்துல ஆயிரம், இரண்டாயிரம் நடிக்கணுமே.. வெறும் 75 பேரை மட்டும் வைத்து எப்படி பண்ணப் போகிறேன் என ஒன்றும் புரியாமல் தவித்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X