பெரிய முதலாளி நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் தான்: உண்மையை உளறிய நடிகர்
சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சி பற்றிய உண்மையை நடிகர் உளறிவிட்டார்.
பெரிய முதலாளி நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி தான் நடக்கிறது என்று முதல் சீசனில் இருந்து பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். அப்படி எல்லாம் இல்லை என்று யார் கூறினாலும் அதை நம்பத் தயாராக இல்லை.
இந்நிலையில் தான் சீனியர் நடிகர் அந்த உண்மயை உளறிவிட்டார்.

பெரிய முதலாளி
பெரிய முதலாளி வீட்டில் இருந்து கிளம்பிய நடிகர் மேடையில் உருக்கமாக பேசினார். வார இறுதி நாட்கள் வந்தால் என் அப்பாவை காண நான் காத்திருப்பேன் என்று வேர்ல்டு ஹீரோ பற்றி பெருமையாக கூறி கண் கலங்கினார். எங்களுக்காக அவர் மக்களிடையே பரிந்து பேசுவது முன்னாள் போட்டியாளர் ஒருவர் கூறித் தான் எங்களுக்கு தெரிந்தது என்றார் நடிகர்.

திரைக்கதை
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது வெற்றிப் படத்தில் நடித்தது போன்று உள்ளது என்று அந்த நடிகர் கூறினார். அதை கேட்ட வேர்ல்டு ஹீரோவோ வெற்றிப் படமே தான். அவர்கள் வெவ்வேறு திரைக்கதை அமைத்தாலும் வசனம், காட்சியமைப்பு, இயக்கம் உங்களுடையது தான் என்றார். எமோஷனலாக இருந்த வேர்ல்டு ஹீரோ அந்த ஃபீலிங்கில் உண்மையை உளறிவிட்டார்.

நிகழ்ச்சி
பெரிய முதலாளி நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் தான் என்று பார்வையாளர்கள் கூறி வருவது உண்மை என்பதை நேற்று வேர்ல்டு ஹீரோவின் பேச்சு உறுதி செய்துள்ளது. திரைக்கதை அமைத்துக் கொடுத்து போட்டியாளர்களை நடிக்க வைக்கிறார்கள். இந்தி நிகழ்ச்சியில் இருந்து பல காட்சிகள் சுடப்பட்டு போட்டியாளர்களை அதன்படியே நடிக்க வைக்கிறார்கள்.

காப்பி
போட்டியாளர்களை விடுங்க, வேர்ல்டு ஹீரோவையே இந்தி முதலாளி நிகழ்ச்சியில் நடந்தது போன்று நடிக்க வைத்துவிட்டார்களே. அதன் பிறகு தானே வேர்ல்டு ஹீரோ இந்தி நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அவர் கோரிக்கை விடுத்த பிறகும் காப்பியடிப்பது இன்னும் நின்றபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











