ஓமைகாட், இதை நம்பவும் முடியல, நம்பாமலும் இருக்கவும் முடியல
Recommended Video

சென்னை: எப்படி பார்த்தாலும் விரல் வித்தை நடிகரின் இந்த மாற்றத்தை நம்ப முடியவில்லையே என்று தான் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
பல திறமைகளை வைத்துக் கொண்டு விரல் வித்தை நடிகர் திமிருடன் இருந்தார். அவர் கடைசியாக நடித்த படத்தின் இயக்குனரை கதறவிட்டார். இந்நிலையில் நடிகர் ஆளே மாறிப் போயுள்ளார்.
ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

சொல்பேச்சு
இயக்குனர் சொல்வதை கேட்டு நடக்கிறார். திமிரா அப்படி என்றால் என்ன என்பது போன்று பம்முகிறார். என்னது விரல் வித்தை நடிகர் இயக்குனரின் பேச்சை கேட்கிறாரா என்று வியந்து வாய் பிளக்காதவர்களே இல்லை.

சந்திப்பு
சினிமா ஸ்டிரைக் தொடர்பான கூட்டத்தில் திடீர் என்று கலந்து கொண்டுள்ளார் நடிகர். அது மட்டும் அல்ல தனது எதிரி நடிகரையே தன்னை புகழ்ந்து பேட்டி கொடுக்க வைத்துவிட்டார்.

எதற்கு
அடங்கி நடக்கிற ஆளா அவரு, இல்லவே இல்லை. அப்படி இருக்கும்போது இந்த அளவுக்கு மனிதர் பம்முகிறார் என்றால் ஏதோ பெரிய திட்டம் இருக்க வேண்டும் என்கிறார் கோடம்பாக்கத்துகாரர்கள்.

தெரியலையே
இப்படி மாறும் அளவுக்கு நடிகர் வாழ்வில் என்ன நடந்தது. அப்படி என்ன திட்டம் வைத்துள்ளார் என்று தெரியலையே. ஒரு வேளை படுத்து தூங்கும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக இருக்குமோ. எதுவாக இருந்தால் என்ன மனிதர் சமத்துப் பிள்ளையாகியுள்ளதை பாராட்டுவோம்.


Click it and Unblock the Notifications











