காணாமல் போன அந்த கவர்ச்சி நடிகை.. தாராளம் காட்ட தயார் என சொன்னதும் குவிந்த சூப்பர் வாய்ப்பு!
சென்னை: ஹீரோயினாக ஒரு சில பெரிய படங்களில் நடித்தாலும், முகத்தில் நடிப்பே வரவில்லை என்பதால் ஓரங்கட்டப்பட்டார் அந்த நடிகை.
பின்னர், கவர்ச்சி குளத்தில் குதித்த அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அதற்கு பிறகு எந்தவொரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்காமலே போய் விட்டது.
திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடந்து விட்ட நிலையில், எப்படி சம்பாதிப்பது என நினைத்த அவர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

வாய்ப்பு இல்லை
ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரிய நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த மூன்றெழுத்து நடிகை, ஒரு சில படங்களுக்கு பிறகு மார்க்கெட் காலியாகி ஒட்டுமொத்தமாக பட வாய்ப்புகளே குறைந்து விட்டன. கவர்ச்சி ரூட்டுக்கு மாறினாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய அதுதான் காரணம் என அப்போதே பேச்சுக்கள் எழுந்தன.

ஓவர் பந்தா
ஏகப்பட்ட நடிகைகள் சினிமாவில் நீடித்து இருக்கும் நிலையில், இந்த நடிகைக்கு திடீரென படவாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்ததற்கு காரணமே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் பந்தா காட்டி ஏகப்பட்ட பிரச்சனைகளை செய்தது தான் என்கின்றனர். கவர்ச்சி காட்டி நடித்தாலும், மதிக்கத் தெரியவில்லை என்றால் சினிமாவில் இருந்து தூக்கி வீசப்படுவார்கள் என்பதற்கு இந்த நடிகை மிகப்பெரிய உதாரணம்.

தாராளம் காட்ட தயார்
அந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்து பல ஆண்டுகள் ஆகின்றன. தான் தற்போது அப்படியெல்லாம் எல்லாம் இல்லை என்று ஒவ்வொரு கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டு வருகிறாரம். மேலும், தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்கவும் தயார் என சொல்லி வாய்ப்பு கேட்ட நிலையில், தற்போது அவருக்கு சூப்பரான சான்ஸ் ஒன்று கிடைத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மேலாடையின்றி
ஒடிடியில் வெளியாகும் வெப்தொடர்களில் சென்சார் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், நடிகர்கள் மற்றும் நடிகைகள் எல்லை மீறி நடித்து வருகின்றனர். சினிமாவில் சான்ஸ் கிடைக்காத நிலையில், தற்போது ஒரு வெப் தொடரில் டாப்லெஸ் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதற்கு உடனடியாக அந்த மூன்றெழுத்து நடிகை ஓகே சொல்லி விட்டாராம்.

விரைவில் அறிவிப்பு
விரைவில் அந்த வெப்தொடரின் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அந்த வெப்தொடரில் அந்த மாதிரி கதபாத்திரத்தில் நடித்துள்ள அந்த நடிகை டாப்லெஸ் ஆக நடித்த ஷூட்டிங் சமீபத்தில் நடந்த நிலையில், ஒட்டுமொத்த யூனிட்டும் அவரது போல்டான நடிப்பை பார்த்து வாயடைத்து போயுள்ளார்களாம். சீக்கிரமே இன்னொரு ரவுண்ட் கோலிவுட்டில் அவர் கலக்குவார் என கோடம்பாக்கத்தில் அவரை பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











