அந்த இயக்குநர் சுட்டுட்டாருய்யா, மறுபடியும் கதையை சுட்டுட்டாருய்யா
சென்னை: இயக்குநர் ஒருவர் ஹிட்டான படத்தின் கதையை சுட்டு பட்டி, டிங்கரிங் செய்துள்ளார்.
இயக்குநர் ஒருவர் முன்னணி நடிகரை வைத்து படம் ஒன்றை எடுத்து வருகிறார். அந்த பட வேலைகள் துவங்கியபோதே கதை சுட்டது என்று பேச்சு கிளம்பியது. இயக்குநர் வழக்கமாக பல ஹிட் படங்களின் கதையை சுட்டு ஒரு கலக்கு கலக்கி தன் சொந்தக் கதை போன்று படம் எடுப்பதற்கு பெயர் போனவர்.
இந்நிலையில் அவர் தற்போது இயக்கி வரும் படத்தின் கதை என்னவென்பது தெரிய வந்துள்ளது. இது சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் கதை தான். ஆனால் அதில் சில மாற்றங்களை சேர்த்து தன் கதையாக்கிவிட்டார் இயக்குநர்.

ஹிட்டான படத்தில் இருந்த மையக்கருவை அப்படியே எடுத்து பட்டி, டிங்கரிங் செய்துள்ளார் இயக்குநர். அதுதான் அவருக்கு கை வந்த கலையாச்சே, சொல்லவா வேண்டும்.
கதையை பல இடத்தில் இருந்து சுட்டாலும் அதை ரசிக்கும்படியாக அளிப்பதே இயக்குநரின் சிறப்பு. அதனால் இந்த படமும் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











