அந்த இளம் நடிகருடன் எல்லாத்தையும் முடித்த யோகா நடிகை.. பட வேலையை விட பலான வேலை தான் அதிகமாம்!
மும்பை: பிரபலமான யோகா நடிகை இளம் நடிகருடன் அந்த படத்தில் நடித்து வரும் நிலையில், படத்தின் வேலைகளில் ஈடுபாடு செலுத்துவதை விட இளம் நடிகருடன் இஷ்டத்துக்கு என்ஜாய் செய்து வருவதாக பரபரக்கும் தகவல்கள் கசிந்து திரைத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வித்தியாசமான யோகாக்களை செய்து மிரட்டி வரும் அந்த யோகா நடிகை சமூக வலைதளங்களிலேயே படு போல்டான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருந்த நிலையில், தற்போது இளம் நடிகருடன் எல்லை மீறி சென்று விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

வயதான நடிகைகள் தொடர்ந்து யங் ஹீரோக்களுடன் என்ஜாய் செய்வதை வாடிக்கையாக கொண்டு வரும் நிலையில், நடிகையும் அந்த ரூட்டுக்கு சென்று விட்டாரே என பாலிவுட்டே பரப்பில் ஆழ்ந்துள்ளதாக கூறுகின்றனர்.
எல்லை மீறிய நடிகை: இளம் நடிகருடன் ஜோடி போட்டு நடித்து வரும் அந்த சீனியர் யோகா நடிகை சமீபத்தில் அந்த நடிகருடன் எல்லா வேலையையும் முடித்து விட்டதாக ஷாக்கிங் தகவல் பாலிவுட்டில் பெரும் பிரளயத்தையே உருவாக்கி உள்ளது. நடிகையின் திரைப்படம் விரைவில் வரப்போவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நடிகை அந்த படத்தில் அக்கறை செலுத்தாமல் இளம் நடிகருடன் ஜல்ஸா செய்வதிலேயே அதீத கவனத்தை செலுத்தி வருவதாக படத்தின் தயாரிப்பாளரே புலம்பி உள்ள சம்பவம் பகீர் கிளப்பி உள்ளது.
காதலருக்கு துரோகம்: அந்த யோகா நடிகை ஏற்கனவே தொழிலதிபர் ஒருவரை காதலித்து வரும் நிலையில், அவருக்கு துரோகம் செய்து விட்டு தற்போது இளம் நடிகருடன் எல்லை மீறி சென்றிருப்பதாக தகவல்கள் தீயாய் பரவி வரும் நிலையில், இந்த விவகாரத்தை தனது காதலருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள நடிகை அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக கூறுகின்றனர்.
சினிமா பிரபலங்கள் இப்படி சின்சியர் இல்லாமல் பட வேலையை பார்க்காமல் சொந்த உணர்ச்சிகளுக்கு நேரத்தை விரயமாக்கி வருவதால் தான் சீக்கிரமே இண்டஸ்ட்ரியை விட்டே காணாமல் போய் விடுகின்றனர் என அந்த தயாரிப்பாளர் மறைமுகமாக பேசிய நிலையில், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











