இன்னொரு நடிகையுடன் நெருக்கம்.. 2வது மனைவியையும் கழட்டி விடப் போறாராம் அந்த பிரபல நடிகர்!
சென்னை: முதல் மனைவியுடன் ஏற்பட்ட அதே பிரச்சனை தான் தற்போது 2வது மனைவியுடனும் ஏற்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
ஆரம்பத்தில் புதுப் பொண்டாட்டியுடன் ரொம்பவே நெருக்கம் காட்டி பல இடங்களுக்குச் சென்று வந்த அந்த நடிகர் சமீப காலமாக 2வது மனைவியுடன் பேசியே சில வாரங்கள் ஆவதாக கூறுகின்றனர்.
எல்லாத்துக்கும் காரணம் புதிதாக அந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்து வரும் அந்த நடிகை தான் என ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

மீண்டும் சொதப்பல்: ஒரு படம் ஹிட் கொடுத்த உடனே அந்த வி எழுத்து நடிகருக்கு தலைக்கு மேல் ரெண்டு கொம்பு முளைத்து விடும் என சினிமா வட்டாரத்தில் பலரும் கூறி வந்ததை போலவே தற்போது அவரது நடவடிக்கைகள் முற்றிலுமாக பழையபடி மாறி உள்ளதாக கூறுகின்றனர்.
நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சமீப காலமாக பெரிய பட வாய்ப்புகள் குவிவதால் கெத்துக் காட்டுகிறேன் என்கிற பெயரில் ஷூட்டிங்கிற்கு கூட சரியாக செல்வதில்லையாம். சமீபத்தில், ஒரு பெரிய படத்தின் ஷூட்டிங்கே நடிகரின் அலட்சியம் காரணமாக நின்று போனதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
2வது மனைவியுடன் பிரச்சனை: நடிகரின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணமே அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் தான் என்கின்றனர். முதல் மனைவியை கழட்டி விட்டுட்டு இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட மனைவியுடன் தற்போது பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

முன்பு போல தனது மனைவியுடன் அந்த நடிகர் நெருக்கமாக இருப்பது இல்லை என்றும் மனைவியுடன் பேசியே சில வாரங்கள் ஆவதாகவும் கூறுகின்றனர். நடிகரை நம்பி வந்த அவரும் இதனால் ரொம்பவே அப்செட்டில் உள்ளாராம்.
அந்த நடிகையுடன் நெருக்கம்: மனைவியுடன் பேசாமல் இருப்பதற்கும், ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக செல்லாமல் இருப்பதற்கும் முக்கிய காரணமே புதிய படத்தில் இணைந்து நடித்த நடிகையுடன் ஏற்பட்ட நெருக்கம் தான் என்கின்றனர்.
அடிக்கடி நடிகையுடன் தனியாக ஹோட்டலிலேயே அந்த நடிகர் தங்கி விடுவதாகவும், குடியும் கும்மாளமும் என தனது நேரத்தை வீணடித்து வருவதால் ஏகப்பட்ட பிரச்சனைகள் அவருக்கும் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











