அந்த முன்னாள் காதலியை எல்லாம் ஹீரோயினா கொண்டு வராதீங்க.. வளரும் நடிகர் போட்ட திடீர் கண்டிஷன்?
சென்னை: எப்படியாவது தனது முன்னாள் காதலருடன் ஜோடி போட்டு நடித்து விட வேண்டும் என பல கட்ட முயற்சிகளை அந்த இளம் நடிகை எடுத்து வரும் நிலையில், வேண்டவே வேண்டாம் என்கிற முடிவில் வளரும் நடிகர் இருக்கிறாராம்.
வரிசையாக அந்த யங் நடிகர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் வெற்றிப் படங்களாக மாறி வரும் நிலையில், சீக்கிரமே முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனியும் இளம் நடிகைகள் வேண்டாம் என்றும் பெரிய நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்தால் தான் அந்த தமாஸ் ஹீரோ போல தானும் வளர முடியும் என்கிற திட்டத்தை நடிகர் போட்டு வருகிறாராம்.

மிஸ் பண்ணிட்டு வருந்தும் நடிகை
அந்த இளம் நடிகரின் காதலை தூக்கி எறிந்த அந்த இளம் நடிகை இப்போ அவரது வளர்ச்சியை பார்த்து ச்சே.. இப்படியொருத்தரை வாழ்க்கையில் மிஸ் பண்ணிட்டோமே என ரொம்பவே ஃபீல் செய்து நடிகருடன் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என பல கட்ட முயற்சிகளை எடுத்து வருவதாக கூறுகின்றனர்.

வேண்டவே வேண்டாம்
ஆனால், தன்னை தூக்கி எறிந்த அந்த நடிகை உடன் தொடர்பே இனி வேண்டாம் என நடிகர் தீவிரமான முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு படத்திலாவது இணைந்து நடித்து விட்டால் எப்படியாவது நடிகரை கரெக்ட் செய்து விடலாம் என நடிகை ரொம்பவே ட்ரை பண்ணியும் நடிகர் நோ சொன்னதால் செம அப்செட்டில் இருக்கிறாராம் அந்த ரியாலிட்டி ஷோ பிரபலம்.

ரூட்டே வேற
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அந்த சீரியல் டு சினிமா நடிகர் தனது ரூட்டையே தற்போது வேறமாறி மாற்றியமைத்துக் கொள்ள சரியான பாதைகளை வகுத்து வருகிறாராம். கிடைத்துள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அப்படியே முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்து விட வேண்டும் என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

டாப் ஹீரோயின்களுக்கு கொக்கி
இளம் நடிகைகளுடன் இனிமேலும் ஜோடி போட்டு நடிக்காதே என நடிகருக்கு வேண்டப்பட்ட சிலர் அட்வைஸ் சொல்லி வந்த நிலையில், இனிமேல் டாப் ஹீரோயின்களை ஜோடியாக்க முயற்சி செய்து வருகிறாராம் அந்த வளரும் நடிகர். ஏற்கனவே பிரியமான நடிகைக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ள நிலையில், அந்த பாட்டு நடிகையும் தற்போது நடிகரின் லிஸ்ட்டில் உள்ளாராம்.

சம்பளம் அதிகரிப்பு
தனது மார்க்கெட்டை புரிந்து கொண்ட நிலையில், அடுத்தடுத்த படங்களுக்கான சம்பளத்தையும் ஜெட் வேகத்தில் உயர்த்தி விட்டாராம் அந்த யங் ஹீரோ. இனிமேல் பெரிய நடிகைகள், பெரிய இயக்குநர்கள் என்று அடுத்த 5 ஆண்டுகளில் டாப் நடிகர்களுக்கு சவால் விடும் திட்டத்தையும் ஸ்டார்ட் செய்து விட்டார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











