நைட் நேரத்தில் நடிகை வீட்டுக்கு ரகசியமாக வந்து போகும் நடிகர்.. அம்பலமானால் அவ்வளவுதான்!
சென்னை: இளம் நடிகை ஒருவரின் வீட்டுக்கு இரவு நேரத்தில் அடிக்கடி நடிகர் ஒருவர் வந்து செல்வதாக பரபரப்பு பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் கொளுந்து விட்டு எரிகின்றன.
பள்ளி மாணவியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அந்த நடிகை. சமீபத்தில் இளம் நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்த நிலையில், இருவரும் ரகசியமாக காதல் செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின.
இந்நிலையில், காதலையும் தாண்டி அவர்கள் உறவு இன்னும் ஆழமாக சென்று விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் தற்போது கோலிவுட்டையே ஆட்டிப் படைத்து வருகிறது.

ஸ்கூல் பொண்ணாக நடிச்சு: யூனிஃபார்ம் அணிந்து கொண்டு ஸ்கூல் பொண்ணாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை சமீபத்தில் கவர்ந்தவர் அந்த நடிகை. புதிதாக அறிமுகமானாலும் தேர்ந்த நடிப்பால் முதல் முறையே பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
அந்த படத்தில் அவர் வரும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை கட்டிப்போட்ட நிலையில், அவரது அழகில் அவருடன் இணைந்து நடித்த ஹீரோவும் மூழ்கிப் போய் விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகருடன் காதல்: லஞ்ச், டின்னர் என அடிக்கடி ஒன்றாக நண்பர்களுடன் வெளியே சென்று வந்த நிலையில், சில இடங்களுக்கு தனியாகவும் இருவரும் சென்ற வந்த தகவல்களும் கோடம்பாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்தன.
இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வருவதாகவும் ஆனால், உடனடியாக காதலை வெளிப்படுத்த வேண்டாம் என ரகசியமாக தங்கள் உறவை வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர்கள் நடந்து கொள்வதை வைத்து பேச்சுக்கள் பரவின.

நைட் நேரத்தில் நடிகையின் ரூமில்: இந்நிலையில், சமீபத்தில் இரவு நேரம் ஆனால், நடிகையின் வீட்டுக்கு அடிக்கடி அந்த நடிகர் வந்து செல்வதாகவும், நடிகையின் ரூமில் ரொம்ப நேரம் செலவழித்து விட்டு வெளியேறுவதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
காதலையும் தாண்டி இருவரது உறவும் எல்லை மீறி செல்வதாகவும் சில நாட்கள் நடிகையின் வீட்டிலேயே தங்கி விடுவது நடிகையின் பெற்றோர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
இருவரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புவதாக நடிகையின் பெற்றோர்களிடத்தில் சொல்லி கேள்வி கேட்டவர்களின் வாயை நடிகை அடைத்துள்ளாராம். ஆனால், இன்னமும் இந்த விவகாரம் நடிகரின் வீட்டுக்குச் செல்லவில்லை என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
திருமணத்துக்கு முன்னாடி அடிக்கடி வீட்டுக்கு வர வேண்டாம் என நடிகையின் அம்மாவே கண்டித்து விட்டதாகவும், ஆனால், நடிகையும் அவரது காதலரும் அதை கண்டுக்கொள்ளவே இல்லை என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











