காமெடியும் பெருசா ஒர்க்கவுட் ஆகல.. தேவையில்லாமல் கிளாஷ் விட்டுட்டோமா.. கலக்கத்தில் நடிகர்!

By Staff

சென்னை: ஜாலியா படம் பண்ணியே பாக்ஸ் ஆபிஸில் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார் அந்த இளம் மாஸ் ஹீரோ.

முதல் முறையாக அந்த பெரிய பண்டிகையில் தனது படம் வெளியாகிறது என்பதே அவருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளித்தது.

ஆனால், சமீபத்தில் வெளியான போட்டி படத்தின் டிரைலர் அவரை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

வசூல் மன்னன்

வசூல் மன்னன்

திறமையானவன் என சினிமாவுக்கு அந்த பிரபல நடிகர் இளம் மாஸ் ஹீரோவை அழைத்து வர, அவர் நினைத்தது பொய் இல்லை என்பதை அவரை விடவே அதிக வசூல் மற்றும் சம்பளம் வாங்கி நிரூபித்துக் காட்டிவிட்டார் அந்த இளம் மாஸ் ஹீரோ. தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் அதிக வசூலை ஈட்டி வரும் நிலையில், பண்டிகை தினத்தை டார்கெட் செய்து புதிய படத்தை இறக்க திட்டமிட்டுள்ளார்.

போட்டி வந்தாலும் பரவாயில்லை

போட்டி வந்தாலும் பரவாயில்லை

இந்த ஆண்டு ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் இருக்கும் இன்னொரு கடின உழைப்பாளி நடிகர் படமும் பண்டிகை தேதியை டார்கெட் செய்து வெளியாகும் அறிவிப்பு வந்த போது கூட, தன்னை வைத்தே அந்த இயக்குநர் ஹிட் கொடுக்க முடியவில்லை. எப்படியும் இந்த படமும் சொதப்பிவிடும் என்றே நினைத்து போட்டி வந்தாலும் பரவாயில்லை என நினைத்திருந்தார்.

ஆடிப் போய்விட்டார்

ஆடிப் போய்விட்டார்

ஆனால், சமீபத்தில் வெளியான அந்த போட்டி படத்தின் டிரைலரை பார்த்து, ஆஹா.. கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ, ஒவ்வொரு காட்சியும் வேறலெவலில் தெறிக்குதே, அப்படியே நம்ம படத்தோட டிரைலரை போட்டுப் பார்த்தால் ஒரு மாஸ் சீன் கூட இல்லையே எப்படி இந்த போட்டியில் ஜெயிப்பது என புரியாமல் புலம்பி வருகிறாராம்.

காமெடியும் வொர்க்கவுட் ஆகல

காமெடியும் வொர்க்கவுட் ஆகல

நடிகரின் முந்தைய இரு படங்களின் டிரைலர்களிலும் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. காமெடி நல்லாவே வொர்க்கவுட் ஆகி ரசிகர்களை தியேட்டருக்கு வர வழைத்தது. ஆனால், இந்த முறை இதுவரை நடந்த புரமோஷன்கள் எதுவும் பெரிதாக ஒட்டவில்லை என்றும் டிரைலரிலும் காமெடி காட்சிகள் கூட வொர்க்கவுட் ஆகவில்லை என கிளம்பிய விமர்சனங்களால் கொஞ்சம் நடுக்கத்தில் தான் உள்ளாராம்.

அது மட்டும் நடந்தால் போதும்

அது மட்டும் நடந்தால் போதும்

தியேட்டரில் தாங்கள் ஜாலியாக சொல்ல வந்த கான்செப்ட் ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டால் மட்டும் போதும், படம் எப்படியும் பிக்கப் ஆகிவிடும் என்கிற நம்பிக்கை இருந்தாலும், போட்டி கொஞ்சம் இல்லை ரொம்பவே டஃப் ஆக இந்த முறை வருகிறது. மேலும், சமீபத்தில் அந்த நடிகர் நடித்த பிரம்மாண்ட படம் பண்ண வசூல் அவருக்கு மேலும் ரசிகர்கள் மத்தியில் மைலேஜ் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்கிற பெரும் யோசனையில் உள்ளாராம். எப்படியாவது புதிய புரமோவை வெயிட்டாக இறக்க வேண்டும் என்கிற ஆலோசனையிலும் இளம் மாஸ் ஹீரோ ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X