அடுத்தடுத்து பயங்கர அடி.. கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட தமாஸ் ஹீரோ.. கண் கலங்கிட்டாராம்!
சென்னை: சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது அவ்வளவு எளிதான விஷயமில்லை.
அதிலும் பல முன்னணி நடிகர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு டாப்பில் வருவதெற்கெல்லாம் கடின உழைப்பும் சரியான திட்டமிடலும் ரொம்ப அவசியம்.
ஆனால், அப்படி முன்னேறும் இளம் நடிகர் திடீரென சறுக்கி விட்டால், மற்ற நடிகர்கள் போட்டி போட்டு முன்னுக்கு வந்து விடுவார்கள். அப்படியொரு நிலைமை தான் அந்த தமாஸ் ஹீரோவுக்கு தற்போது நடந்துள்ளது என பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

கண்ணீர் சிந்திய நடிகர்
தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த அந்த தமாஸ் ஹீரோ திடீரென ஜாலியாக ஒரு படம் கொடுக்கலாம் என இயக்குநர் மீது பெரும் நம்பிக்கை வைத்து கொடுத்த படம் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில், கண்கலங்கி விட்டார் என பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

முன்னேறிய நடிகர்
இந்த நடிகருடன் போட்டி போட்டு ஜெயித்து விடலாம் என தமாஸ் ஹீரோ திட்டம் போட்ட நிலையில், நானெல்லாம் மாஸ் ஹீரோவிடமே கிளாஷ் விட்டு ஜெயித்துக் காட்டியவன் என நிரூபித்து பல இடங்கள் டாப் லிஸ்ட்டில் முன்னேறி உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்ததன் விளைவு காரணமாக அந்த நடிகருக்கு ஏகப்பட்ட இடங்களில் மார்க்கெட் அதிகரித்து விட்டதாம்.

தப்பு கணக்கு
நடிகர் போட்ட தப்பு கணக்கு தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் என தயாரிப்பு தரப்பும் நடிகர் மீது வெறுப்பை காட்டிய நிலையில், இதற்கு மேல் அடுத்த அடியை பார்த்து வைக்க வேண்டும் என ரொம்பவே பயந்து பயந்து ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருவதாகவும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

பின்னுக்கு தள்ளப்பட்டார்
லேட்டா வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் லேட்டஸ்ட்டாக பல கோடிகளை பக்காவாக வசூல் செய்து டாப் இடத்தில் தூக்கி நிறுத்தப்பட்ட அந்த இளம் நடிகர் திடீரென தற்போது அவருக்கு முன்பாக இருந்தே சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து வரும் நடிகர்கள் மீண்டும் கம்பேக் கொடுத்து வரும் நிலையில், பல இடங்கள் கடகடவென பின்னுக்கு சென்று விட்டாராம்.

விடா முயற்சி
அதை நினைத்து கவலைப்பட்டாலும், சீக்கிரமே மீண்டும் தனது இடத்தை தரமாக பிடித்து விடுவேன் என்கிற விடா முயற்சியை நடிகர் மேற்கொண்டு வருவதாகவும், அடுத்த படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி ஹீரோக்களே வெற்றி, தோல்விகளை மாற்றி மாற்றி சந்தித்து வரும் நிலையில், நாம மட்டும் என்ன விதிவிலக்கா என நினைத்துக் கொண்டு தன்னைத் தானே தேற்றிக் கொண்டார் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











