அந்த தொகுப்பாளினியை விடாது டார்ச்சர் பண்ணும் நடிகர்.. ஃபீல்டை விட்டுப் போகவே முடிவாம்?
சென்னை: சினிமா ஹீரோயின் தொடங்கி சின்னத்திரை நடிகைகளுக்கு மட்டுமல்ல தொகுப்பாளினிகளுக்கு கூட அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லையை பிரபலங்கள் கொடுத்து வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் எதற்குமே ஒரு கட்டுப்பாடோ, ஒழுங்கு முறையோ அதிகமாக இல்லாத நிலையில், தொடர்ந்து இது போன்ற தொல்லைகள் நேர்ந்து வருவதாக பெண்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.
சமீப காலமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அந்த பிரபல தொகுப்பாளினிக்கு ஒரு இளம் நடிகர் டார்ச்சர் கொடுத்து வருகிறாராம்.

எவ்வளவு நேரம் ஆனாலும்
தொகுப்பாளினிகள் எவ்வளவு நேரம் ஆனாலும் ஒரே இடத்தில் நின்று முதல் நொடியில் எப்படி ஹேப்பியா பேசினாரோ அதே போல நள்ளிரவு கடந்தாலும் அதே உற்சாகத்துடன் முகம் சுளிக்காமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். சமீப காலமாக பல்வேறு பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அந்த தொகுப்பாளினிக்கு நடிகர் ஒருவர் டார்ச்சர் கொடுத்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

படுக்கைக்கு அழைக்கும் நடிகர்
தொகுப்பாளினியின் அழகும் வசீகரமும் குரலும் கவர்ந்த நிலையில், இளம் நடிகர் ஒருவர் அந்த தொகுப்பாளினியை தனியாக அழைத்து வெகுவாக பாராட்ட தொகுப்பாளினிக்கு ரொம்பவே சந்தோஷம் ஆகிடுச்சாம். நள்ளிரவு நேரத்திலும் எப்படிங்க இவ்ளோ ஃபிரெஷ்ஷா பேசுறீங்க சூப்பருங்க என பாராட்டி விட்டு என் ரூம் வரைக்கும் வர முடியுமா என அதிர்ச்சி கொடுத்திருக்கிறாராம்.

அவாய்டு பண்ண ஆங்கர்
இளம் நடிகர் மீது அந்த தொகுப்பாளினி கொண்டிருந்த அத்தனை நல்ல எண்ணங்களும் ஒரே ஒரு வார்த்தையால் சுக்கு நூறாக உடைந்து போய்விட்டதாம். அப்படியே சிரித்துக் கொண்டே அதெல்லாம் வேண்டாம் சார், நீங்க பாராட்டுனதே போதும் என சிரித்துக் கொண்டே பேசி விட்டு சட்டென அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்று அழகாக அந்த நடிகரை தொகுப்பாளினி அவாய்டு பண்ணி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

போனில் டார்ச்சர்
ஆனால், தொகுப்பாளினியின் நம்பரை உஷார் பண்ண அந்த யங் ஹீரோ போன் செய்தும் அப்ப நீ வரமாட்ட என டார்ச்சர் கொடுத்து வருகிறாராம். மேலும், அந்த தொகுப்பாளினி குறித்து அசிங்க அசிங்கமாகவும் வர்ணித்தும், பேச அவர் உடனடியாக கட் செய்து விட்டு இந்த விஷயத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் தனது சகாக்களிடம் புலம்பிய நிலையில், தகவல்களை வெளியே கசியவிட்டாலே போதும், அந்த நடிகர் ஆட்டோமெட்டிக்காக அடங்கி விடுவார் என ஐடியா கூறி உள்ளதாக கூறுகின்றனர்.

ச்சே இப்படியும் இருக்கானுங்களே
பல பெண்களை இப்படித்தானே பேசி பேசி அந்த நடிகர் மோசம் செய்திருப்பார் என நினைத்து நினைத்து, தனது வாழ்க்கை என்ன ஆகப் போகிறதோ என்கிற கவலையில் அந்த தொகுப்பாளினி இது தொடர்பாக போலீஸுக்கு போகலாமா என்கிற நிலைக்கே வந்து விட்டதாக கூறுகின்றனர்.

கரியர் காலியாகிடுமே
ஆனால், அதன் பிறகு நடிகர் தனது கரியரையே காலி செய்து விடுவாரே என்பதால், இந்த விஷயத்தை வேறு யாராவது நடிகருக்கு நெருங்கிய பிரபலங்களை வைத்தே சுமூகமாக டீல் செய்து முடித்துக் கொள்ளலாம் என்கிற ஐடியாவிலும் அவர் இருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











