கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்த சீரியல் நடிகை.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய யங் ஹீரோ.. சூப்பர்!

By Staff

சென்னை: இளம் நடிகருடன் சில படங்களில் இணைந்து நடித்த சீரியல் நடிகை கடன் தொல்லையால் விபரீத முடிவெடுக்க நினைத்த நிலையில், சரியான நேரத்தில் அவருக்கு உதவி செய்து யங் ஹீரோ ஒருவர் காப்பாற்றியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த பிரபல டிவி சீரியலில் சில ஹிட் தொடர்களில் நடித்து வந்த நடிகையுடன் ஆரம்பத்தில் இருந்தே அந்த யங் ஹீரோவுக்கு நல்ல நெருக்கமான பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அக்கா, தம்பியாகவே இருவரும் பழகி வந்த நிலையில், நடிகைக்கு சமீப காலமாக சீரியல் வாய்ப்புகளும் பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போய் விட்டதால், கடன் தொல்லையில் சிக்கிக் கிடந்திருக்கிறார்.

gossip kollywood tamil cinema gossip

ஆனால், அவர் தனக்கு தெரிந்த எந்தவொரு பிரபலத்திடமும் உதவி கேட்க வேண்டாம் என நினைத்து வந்த நிலையில், நடிகையை கடன் கொடுத்தவர்கள் மோசமாக அசிங்கப்படுத்திய நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரை துறக்கவே முடிவு செய்துவிட்டாராம்.

நடிகையின் விபரீத முடிவு: சினிமாவில் சில வாய்ப்புகள் அந்த சீரியல் நடிகைக்கு கிடைத்ததும் எங்கேயோ போகப்போகிறோம் என நினைத்து கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கியிருக்கிறாராம் அந்த நடிகை. மேலும், பளபளப்பாக புதிய சொகுசு கார் எல்லாம் வாங்கி நடிகை இன்ஸ்டாகிராமில் சீன் காட்டி வந்த நிலையில், பட வாய்ப்புகளும் போய், சீரியல் வாய்ப்புகளும் அடியோடு குறைந்த நிலையில், மாதம் மாதம் கடன் அடைக்க முடியாமல் தவியாய் தவித்து வந்திருக்கிறார் அந்த நடிகை.

அசிங்கமான பேச்சுக்கள்: ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் நடிகையை ரொம்பவே கேவலப்படுத்தி கெட்ட வார்த்தைகளால் திட்டியும், கடனை வேற விதமாக அடைக்க வழி சொல்கிறோம். நீதான் நடிகையாச்சே அதை செய்யுறியான்னுலாம் கேட்டு நடிகையை மனதளவில் உடைக்க அவர் தற்கொலை செய்துக்கொண்டு சாகவே துணிந்து விட்டாராம்.

கடவுளாக உதவிய யங் நடிகர்: சீரியலில் கஷ்டப்பட்டு பல முறை சினிமாவில் சாதிக்க அந்த நடிகர் போராடும் போதெல்லாம் அந்த நடிகை ரொம்பவே ஊக்கம் கொடுத்து, பல பேரிடம் அறிமுகமும் செய்து வைத்திருக்கிறார். நடிகையின் பிரச்சனை குறித்து அவரது தோழி வாயிலாக அறிந்துக் கொண்ட நடிகர் அக்கா என்னிடம் ஏன் எதையும் சொல்லவில்லை எனக் கூறி தற்கொலை செய்துக் கொள்ளும் மனநிலையில், இருந்த நடிகைக்கு உடனடியாக பண உதவி செய்து அவரது கடன் சுமையை போக்கியுள்ளார் என சில தகவல்கள் லீக் ஆகியுள்ளன. ஆனால், நடிகர் செய்த செயல் வெளியே தெரிய வேண்டாம் என்றும் நடிகைக்கு நேர்ந்த அவமானங்களும் தெரிய வேண்டாம் என நடிகர் நினைத்து எதையும் செய்தியாக்கி தம்பட்டம் செய்யாமல் இருக்கிறார் என கோடம்பாக்கத்தில் அந்த யங் ஹீரோவை சிலர் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X