ப்ரோமோஷனை விட ரொமான்ஸ் தான் அதிகம் இருக்காம்.. சமத்து நடிகையுடன் ரகசிய திருமணமே நடந்துடுச்சா?
சென்னை: ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று நடிகை வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றாலும், விடாமல் போன் பண்ணி நீ வந்தா தான் நல்லா இருக்கும் என யங் நடிகர் ப்ரோமோஷனுக்காக சமத்து நடிகையை வரவழைத்தாலும், அவர் அழைத்ததே ரொமான்ஸ் செய்யத்தான் என தகவல்கள் கசிந்துள்ளன.
ப்ரோமோஷன் முடிந்து தனிப்பட்ட முறையில் கூட நடிகையுடன் ரொமான்ஸ் செய்யாமல் வெளிப்படையாகவே இளம் நடிகர் அத்துமீறி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரே நடிகரும் அந்த நடிகையும் செய்து வரும் காதல் லீலைகளை பார்த்து சமீபத்தில் காண்டாகி விட்டதாக கூறுகின்றனர்.
இதுவும் ஓடலண்ணா: அந்த யங் ஹீரோவுக்கும் பிரபல நடிகைக்கும் இந்த படம் அக்னி பரீட்சை போன்றது. எப்படியும் ஹிட் ஆகிவிடும் என்கிற நம்பிக்கையில் காதல் மற்றும் குடும்ப என்டர்டெயினர் படமாக இதனை கொடுக்க உள்ளனர். ஆனால், குடும்பங்கள் தியேட்டருக்கு வருமா என்றே சந்தேகப்படும் அளவுக்கு நடிகரும் நடிகையும் தீவிர ரொமான்ஸில் ஈடுபட்டு இளைஞர்களை முழுவதும் டார்கெட் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
ஒரே ரொமான்ஸ் தான்: இதுதான் சான்ஸ் என நினைத்தாரா யங் நடிகர் அல்லது நடிகையை பிரிய மனமில்லையா என தெரியவில்லை. வெளிநாட்டுக்கு ரெஸ்ட் எடுக்க நடிகை சென்ற நிலையிலும் அவரை உடனே வாங்க என அழைத்து தொடர்ந்து ரொமான்ஸ் செய்து வருகிறார்.
விவாகரத்து செய்து கொண்ட நடிகையின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கரெக்ட் செய்து விடுவாரோ யங் நடிகர் என திரையுலகமே பெரும் பரபரப்பில் உள்ளது. ப்ரோமோஷன் முடிந்த பின்னர் இருவரும் ஒரே ஹோட்டல் அறையில் தங்குவதும் இரவு நேரங்களில் ரெஸ்டரன்டுகள் உள்ளிட்ட இடங்களுக்கு பிரைவேட்டாக சுற்றி வருவதுமாக உள்ளார்கள் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ரகசிய திருமணம்: யங் நடிகருடன் நேரத்தை செலவிடுவது நடிகையையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் இருவரும் சீக்கிரமே ரகசிய திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் புகைய ஆரம்பித்துள்ளன. படம் ஹிட் அடித்து விட்டால், நடிகருடன் ரிலேஷன்ஷிப்பை நடிகை வலுவாக்கி விடுவார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











