பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்
சென்னை: யங் நடிகர் ஒருவர் மாஸ் நடிகராக பல முயற்சிகளை விடாமல் செய்து வருகிறார். ஆனால், காமெடி செட் ஆகுற அளவுக்கு அவருக்கு ஆக்ஷன் கதைகள் ஹிட் கொடுக்கவில்லை.
இந்நிலையில், ஹாலிவுட் ரேஞ்சில் உருவாகியுள்ள அந்த படத்திற்கு பட்ஜெட் மட்டுமின்றி புரொமோஷனையும் ஏகத்துக்கு தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது.

ஆனால், தன்னை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட் மற்றும் புரோமோஷனை செய்து வருகிறார்களே, கடைசியில் படம் வெளியானது எல்லாம் புஸ்சாக மாறிவிட்டால் என்ன செய்வது என யங் நடிகர் தனது மைண்ட் வாய்ஸில் பேசி வருகிறாராம்.
தயாரிப்பு தரப்பு நிறுவனமும் முழுக்க முழுக்க இவரை நம்பி பணத்தை இரைக்காமல், அந்த ஹிட் படம் கொடுத்த இயக்குநரை நம்பித்தான் பணத்தை வாரி இரைப்பதாக கேட்பவர்களிடம் சமாளித்து வந்தலும், பந்தயம் கட்டியுள்ள குதிரை ஓடினால் தானே பணத்தை ஜெயிக்க முடியும் என்றும், சிலர் தயாரிப்பு தரப்பிடம் நாயகன் குறித்த சந்தேகத்தை கிளப்பி வருகிறார்களாம்.
இந்த படம் கிடைத்த இதே கேப்பில் இன்னொரு கடாவையும் வெட்டி விடாலாம் என மீண்டும் இதே தயாரிப்பு தரப்புக்கு தனது அடுத்த படத்தின் முழு பட்ஜெட்டையும் யங் ஹீரோ கொடுக்க, சுதாரித்துக் கொண்ட தயாரிப்பு தரப்பு, மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், பாதி சுமையை நீங்க ஏத்துக்கோங்க என நாசுக்காக கொஞ்சம் தப்பித்துள்ளதாம்.
விரைவில் வெளியாகவுள்ள யங் நடிகரின் படத்திற்கு முன்னணி நாயகர்களின் படங்களும் போட்டியில் இறங்கவுள்ளதால், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, வசூல் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











