சண்டை பயிற்சி இயக்குநரிடமே சண்டையா?.. அந்த இளம் நடிகருக்கு ஏழரை ஆரம்பிச்சிடுச்சு போல?

By Staff

சென்னை: ஒரு படம் ஓடியதும் அந்த இளம் நடிகரின் அலப்பறை தாங்க முடியவில்லை என சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி விட்டன. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல நடிகர்கள் டவுன் டு எர்த்தாக எளிமையாக இருந்து வரும் நிலையில், ஓவர் பந்தா காட்டுவதுமாக பவுன்சர்கள் புடைசூழ அந்த ஹீரோ செல்வதுமாக சீன் போட்டு வருகிறார் என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு வருகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, சினிமா உலகில் முன்னணி நடிகர்களே காலை தொட்டு வணங்கும் சண்டை பயிற்சி இயக்குநரிடமே அந்த இளம் நடிகர் சண்டை போட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

Young actor misbehave with Stunt Master shocks Kollywood

மேலும், நடிகரின் நடவடிக்கை முன்பு போல இல்லை என்றும் தேவையற்ற செலவுகளை தயாரிப்பாளர்களுக்கு இழுத்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

இப்பவே பவுன்சர்ஸ்: பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த நடிகர்கள் கூட இன்னமும் தங்களுக்கென தனியாக பவுன்சர்களை எல்லாம் வைத்துக் கொள்ளாமல் தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். சூட்டிங் ஸ்பாட்டுக்கும் சோலோவாக போய் நல்லா நடிச்சிட்டு வராங்க. ஆனால், வளர்ந்து வரும் அந்த இளம் நடிகர் இப்பவே பவுன்சர்களை வைத்துக் கொண்டு ரசிகர்களை ஒதுக்கி வைப்பதாக சர்ச்சைகள் வெடித்துள்ளன.

பவுன்சர்களுக்கு திட்டு: சில ரசிகர்கள் பவுன்சர்களை போக்கு காட்டி விட்டு நடிகரிடம் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போதே டென்ஷனான நடிகர் தனது பவுன்சர் டீமை அழைத்து எல்லோரையும் திட்டி வீட்டுக்கே அனுப்பி விட்டார் என்றும் புதிய பவுன்சர்களை தனக்கு நியமிக்க சொல்லி தயாரிப்பு தரப்புக்கு டார்ச்சர் கொடுத்திருப்பதாகவும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர்.

ஸ்டண்ட் டைரக்டருடன் சண்டை: இதுமட்டுமின்றி சண்டை பயிற்சி இயக்குநரிடமே தனது கோபத்தை காட்டி விட்டாராம் அந்த யங் ஸ்டார் என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் அந்த இளம் நடிகர் மீது முன் வைக்கப்பட்டு வருகின்றன. சினிமாவில் பல முன்னணி நடிகர்களே ஸ்டண்ட் மாஸ்டர்கள் காலை தொட்டு வணங்கி விட்டுத்தான் படங்களில் நடிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால், யாருமே பண்ணாத விஷயமாக இந்த இளம் நடிகர் இப்படி ஓவரா துள்ளி குதிக்கிறாரே இவர் நிலைமை சினிமாவில் என்ன ஆகப் போகிறதோ என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

எப்பவும் லேட்: இதுமட்டுமின்றி தயாரிப்பாளருக்கு தேவையற்ற செலவுகளை இழுத்து விடுவது. 2 ஹீரோயின்கள் இருந்தால் தான் நடிப்பேன் என அடம்பிடிப்பது. சூட்டிங்கிற்கு எப்போதுமே லேட்டாக செல்வது என அலப்பறையை கிளப்பி வருகிறார் இளம் நடிகர் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X