»   »  தள்ளிப் போகும் படம்... வருத்தத்தில் சங்கத் தலைவர்

தள்ளிப் போகும் படம்... வருத்தத்தில் சங்கத் தலைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவமான அந்த இளம்நடிகர் தற்போது மீள முடியாத அளவிற்கு வருத்தத்தில் இருக்கிறாராம். காரணம் என்னவென்று விசாரித்தால் எல்லாம் பட விவகாரம்தான் என்கிறார்கள்.

தமிழின் மூத்த நடிகர் பெயரில் பாதியையும், அறுபடை வீடு கொண்ட கடவுளின் பெயரில் மீதியையும் வைத்து நடிகர் நடித்த படம் தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது.

படத்தை நன்கு விளம்பரம் செய்து வெளியிடப் போகும் நேரத்தில் படத்தை வாங்கிய இயக்குநரின் நிறுவனம் கடனில் மாட்டிக் கொண்டுவிட்டது.

ஒவ்வொருமுறை படம் வெளியிடப் போகும்போதும் ஏதாவது ஒரு சிக்கல் வந்துவிடுவதால் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. 6 மாத காலமாக படம் வெளியாகாததால் நடிகர் தற்போது வருத்தத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார்.

முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ச்சியும் சம்பளமும் அதிகரித்துக் கொண்டே சென்றதில் தற்போது சொந்தமாக படக்கம்பெனி ஆரம்பிக்கும் அளவிற்கு நடிகர் வளர்ந்து விட்டார்.

எனினும் இந்தப் படம் வெளிவராமல் போனால் தனது எதிர்கால திரையுலக வாழ்க்கை பாதிக்கக் கூடும் என்று பயந்து போய் இருக்கிறாராம் நடிகர்.

English summary
The Association President Actor Recent comedy Movie Continuously Postponed, the Actor get some fear. Now he is Eagerly Waiting the movie release date.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil