பல கோடி நஷ்டம்.. ஒரு ரூபா கூட அந்த ஹீரோ கொடுக்கலையாமே.. எல்லாமே ஏமாற்று வேலை தானா?

By Staff

சென்னை: பைலிங்குவல் படங்கள் அதிகமாக முளைத்து வரும் நிலையில், அந்த இளம் காதல் மன்னன் நடித்த சண்டை படம் இரு மொழிகளில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியானது.

ஆனால், படம் வெளியான பிறகு முதல் பத்து நிமிடம் கூட பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ட்ரோல் செய்து படத்தை டிசாஸ்டராக மாற்றினர்.

பல கோடி நஷ்டத்துக்கு இழப்பீடு கொடுத்து விட்டார் நடிகர் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், உண்மையில் என்ன ஆனது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

ரொம்ப யங்

ரொம்ப யங்

இளம் வயதிலேயே இந்தியளவில் ஏராளமான ரசிகர்களையும் குறிப்பாக ரசிகைகளையும் கொண்டுள்ள அந்த இளம் நடிகரின் படங்கள் வெளியானாலே இளைஞர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான அவர் படம் அனைத்து ரசிகர்களையும் கடுப்பாக்கியது.

நடிகைகளின் ஃபேவரைட்

நடிகைகளின் ஃபேவரைட்

ரசிகர்களுக்கும் ரசிகைகளுக்கும் மட்டுமின்றி ஏகப்பட்ட நடிகைகளுக்கும் அவர் ஃபேவரைட்டான நடிகர் தான். அவருடன் இணைந்து நடிக்க நடிகைகள் போட்டா போட்டிப் போட்டுக் கொண்டு கால்ஷீட் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட்டின் இளம் நடிகையுடன் இணைந்து நடித்த அவரது பெரிய பட்ஜெட் படம் பெயருக்கு ஏற்றவாறு பாயும் என்று பார்த்தால், படுத்து தூங்கியே விட்டது.

நிர்வாண புரமோஷன்

நிர்வாண புரமோஷன்

படத்துக்காக நிர்வாண புரமோஷன் எல்லாம் நடிகர் செய்து காட்டியும் ஒரு பைசாவுக்கு அவையெல்லாம் படம் வெளியான பிறகு பிரயோஜனமே படவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஓவர் பில்டப் கொடுத்த படம் இப்படி பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதே என படத்தை தயாரித்த நடிகை தலையில் துண்டை போட்டுக் கொண்டு உட்கார அவரிடமும் இவர் தனது தில்லாலங்கடி வேலையை காட்டி உள்ளார் என தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு பைசா கூட கொடுக்கல

ஒரு பைசா கூட கொடுக்கல

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் பாரத்தை சுமக்கும் விதமாக நடிகர் பல கோடி பணம் கொடுத்தார் என்றும் சம்பளத்தையே அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டார் என்றும் பி.ஆர்.ஓ வை வைத்து செய்தியை மட்டும் பரப்பிவிட்டு சத்தமே இல்லாமல் செல்போன் நம்பரை மாற்றிவிட்டாராம் அந்த இளம் காதல் மன்னன்.

வெறுப்பில் விநியோகஸ்தர்கள்

வெறுப்பில் விநியோகஸ்தர்கள்

நடிகர் இப்படி ஆசைக்காட்டி மோசம் செய்து விட்டாரே என அவரை மட்டுமே நம்பி படத்தை பல கோடி போட்டு வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லாம் பயங்கர காண்டில் உள்ளார்களாம். அதிலும், நடிகர் நம்பருக்கு போன் போட்டால், ஸ்விட்ச் ஆஃப் என்றே வருவதால் மேலும் கடுப்பாகி உள்ளனர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இதெல்லாம் நடிகரின் அடுத்த படம் வெளியாகும் போது ஒட்டுமொத்தமாக பாதிக்கும் என எச்சரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X