மாஸ் ஹீரோ படத்தை விட புரமோஷன் பலமா இருக்கணும்.. தயாரிப்பாளருக்கு ஆர்டர் போட்ட இளம் மாஸ் நடிகர்!
சென்னை: அடுத்து வெளியாக உள்ள தனது படத்தின் புரமோஷனை ஆரம்பிக்க ஆயத்தமாகி விட்டார் அந்த இளம் மாஸ் ஹீரோ.
படத்தை பக்காவாக எடுப்பதை விட பிரம்மாண்ட பார்சல் பண்ணி விற்று விடுவதிலேயே பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நல்லா இருக்கோ, இல்லையோ முதல் நாளிலேயே முண்டியடித்துக் கொண்டு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் வேலையை மட்டும் கச்சிதமாக செய்து விட வேண்டும் என்கிற பெரிய நடிகர்களின் ஃபார்முலாவை தொடர்ந்து செய்து வரும் அந்த இளம் மாஸ் ஹீரோ தனது அடுத்த படத்திற்கும் மாஸ்டர் பிளான் போட்டுள்ளாராம்.

தொட்டதெல்லாம் பொன்னாகுது
இளம் மாஸ் ஹீரோ சினிமாவுக்கு வந்த குறைந்த ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர்கள் இடத்தை பிடித்து விட்டார். யாருக்கு வசூல் வருகிறதோ அவர்கள் தான் நல்ல நடிகர்கள் என்கிற முத்திரையையும் பெற்றுக் கொண்ட அவர், மாஸ் ஹீரோவை வெறித்தனமாக ஃபாலோ செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே புகழ்
இத்தனை காலமாக மாஸ் ஹீரோவை எந்த விஷயத்தில் ரசிகர்களுக்கு பிடித்து வந்தது என்பதை தெளிவாக கால்குலேட் செய்து அந்த விஷயத்தில் தானும் கெட்டிக்காரன் ஆக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் இளம் மாஸ் நடிகர். அவருக்கு கிடைத்த அதே புகழ் நமக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். மாஸ் நடிகரின் ஃபார்முலாவைத் தானே நாமும் பயன்படுத்துகிறோம், அதில் எந்தவொரு தப்பும் இல்லை என்றும் கூறி வருகிறார் அந்த வாயுள்ள பிள்ளை.

பெரிய புரமோஷன்
ஓட்டை படத்தையும் ஒட்டகத்தின் மேல் ஏற்றி விட்டு ஓட வைக்கும் கலையை சினிமா உலகினர் நன்கு கற்றுக் கொண்ட நிலையில், தனது அடுத்த படத்தையும் பெரிய புரமோஷன் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு முதல் நாளே முண்டியடித்துக் கொண்டு பார்க்க செய்து விட வேண்டும் என்கிற முடிவில் தீவிரமாக இருக்கிறாராம்.

தயாரிப்பாளருக்கு ஆர்டர் q
ஏற்கனவே படத்தை பண்டிகை தினத்தன்று தான் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளருக்கு ஆர்டர் போட்டு வட்டியை ஏற்றிவிட்டதும் இல்லாமல், தற்போது, மாஸ் நடிகர் படத்துக்கு பண்ணப் போகும் புரமோஷனை விட பக்கத்து ஸ்டேட்டில் பெரிய புரமோஷனை தனது படத்துக்கு செய்ய வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக பேசி விட்டாராம். எப்படியோ படம் வெளியாகி லாபம் வந்தால் சரி என தயாரிப்பாளரும் குட்டிப் புலியின் எண்ணத்தை ஈடேற்ற ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











