கூட இருந்தே குழி பறிச்சிட்டாங்க.. ஆனால், தமாஸ் ஹீரோவுக்கு கெட்டதிலும் நடந்த ஒரு நல்லது?
சென்னை: எப்படியாவது டாப் நடிகராக மாறி விட வேண்டும் என்பதற்காக அந்த இளம் நடிகர் எடுத்த அனைத்து முயற்சிகளும் அவர் சமீபத்தில் செய்த சிறிய தவறினால் சரிந்து விட்டது என்கின்றனர்.
ஆனால், அதற்கு காரணம் அவர் கூடவே இருந்து கொம்பு சீவி விட்ட சிலர் தான் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஆனால், கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல ஒரு சூப்பரான விஷயம் அந்த தமாஸ் ஹீரோவுக்கு தற்போது நடந்துள்ளது என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடா முயற்சி
எந்தவொரு பிரபல வாரிசின் மகனாகவோ, சினிமா துறையில் தெரிஞ்சவங்க, ஏகப்பட்ட சொத்துக்களுடன் பேருக்கு படம் நடிக்கவோ அந்த தமாஸ் ஹீரோ சினிமாவில் அடியெடுத்து வைக்கவில்லை. தனது விடா முயற்சியால் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக இந்த இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஓவர் பில்டப்
நடிகருக்கு டைட்டிலிலேயே இயக்குநர் மிகப்பெரிய ஐஸை தலையில் தூக்கி வைத்ததும் அவர் வேறு எதையும் சிந்திக்காமல் தலை கொடுத்து விட்டார். மேலும், உடனிருந்தவர்கள் எல்லாம் நடிகருக்கு எதையுமே எடுத்துச் சொல்லாமல் ஓவர் பில்டப் கொடுத்தே அவரை உசுப்பேற்றி விட்டது தான் எல்லாத்துக்குமே காரணம் என்கின்றனர்.

கூட இருந்தே குழி பறித்தனர்
பெரிய நடிகர்கள் ரேஞ்சுக்கு இந்த தமாஸ் ஹீரோவை தூக்கி வைத்து கொண்டாடுவது போல நாடகமாடி சிலர் செய்த சதி செயல்கள் தான் இங்கே ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகள் அந்த இளம் நடிகர் மீது பரவவே காரணம் என்றும், கூடவே இருந்து குழி பறித்து விட்டனர் என்றும் பேச்சுக்கள் பரவி வருகின்றன.

கெட்டதிலும் நல்லது
ஆனால், எந்தவொரு கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்பதை போல நடிகரின் அந்த துணிச்சலான முடிவு காரணமாக தற்போது பக்கத்து ஸ்டேட்டில் அவரது ரீச் ரொம்பவே அதிகமாகி இருக்கிறதாம். அவருக்கான மார்க்கெட்டும் பாசிட்டிவாக ஓப்பன் ஆகி உள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களை வாங்க அங்கே அவருக்கு பெரிய போட்டியே நிலவுவதாகவும், சில தயாரிப்பாளர்கள் அந்த தமாஸ் ஹீரோவை வைத்து புதிய படங்களை தயாரிக்கவும் முன் வந்துள்ளனர் என்கிற ஹாட் அப்டேட் கிடைத்துள்ளன.

ரசிகர்களை புடிச்சிட்டாரு
இயக்குநர் பண்ண சொதப்பல் காரணமாகத்தான் படம் ஓடவில்லை என்றும், ஆனால், ஹீரோவையும் அவரது அழகான நடிப்பும் பக்கத்து ஸ்டேட் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது என்றும் கூறுகின்றனர். அடுத்தடுத்து அவரது படங்கள் வெளியாகும் பட்சத்தில் மிகப்பெரிய பிசினஸ் அவருக்கு பக்கத்து ஸ்டேட்டில் நடக்கும் என்பது உறுதியாகி உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











