தொகுப்பாளினியுடன் சம்மரைக் கொண்டாடும் நடிகர்.. கொடுத்து வைக்கவில்லையேனு தயாரிப்பாளர் வருத்தம்
சென்னை: நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் திரையுலகில் காலடி எடுத்து வைத்து வாழ்க்கையை தொலைத்தவர்கள், வாழ்க்கையில் திசை மாறிப் போனவர்கள் பலர் உள்ளனர். காரணம் திரைத்துறையில் நல்லவர் வேஷம் போட்ட நரிகளும் உலாவுவதால், பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி இருக்கையில் திரையுலகம் குறித்து நன்கு தெரிந்த தொகுப்பாளினி ஒருவர், திரையுலகிலும் தான் மின்ன வேண்டும் என்று எடுத்துள்ள சில பல முடிவுகள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளதாம்.
அதாவது தொகுப்பாளினி நடிகையாக நடிக்க பல முயற்சிகள் செய்து வந்தாலும், பெரியதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் நடிகை ஆகும் கனவை கைவிடாத தொகுப்பாளினி, தாராள மனதுடன் எடுத்த முடிவால் வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இப்படி இருக்கையில் தொகுப்பாளினியும் ஒரு வளர்ந்து வரும் நடிகரும் அடுத்ததாக ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார்களாம். படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் படத்தின் ப்ரீ புரெடக்ஷன் வேலைகளும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கையில், தயாரிப்பாளர் தலையில் படத்தின் பட்ஜெட்டுக்கு சம்மந்தமில்லாத பில்லைக் கட்டியுள்ளாராம் நடிகர்.

நடிகரின் அட்ராசிட்டி: அதாவது படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. அதனால் நடிகையுடன் அதாவது தொகுப்பாளினியுடன் சின்னதா ஒரு ட்ரிப் சென்று வந்தால் படப்பிடிப்புத் தளத்தில் நன்கு இணக்கமாக நடிக்க முடியும். எனவே தனித்தீவில் இருக்கும் ரிசாட்டுக்கு செல்லவும் அங்கு சுமார் இரண்டு வார காலம் தங்கவும் ஏற்பாடு செய்யச் சொல்லி உள்ளார்.
வருத்தத்தில் தயாரிப்பாளர்: இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தயாரிப்பாளரோ வேறு வழியே இல்லாமல் டிக்கெட் போட்டு கொடுத்தாராம். நடிகரும் நடிகையை கூட்டி கொண்டு அந்த தனி தீவுக்குச் சென்று விட்டாராம். அங்கு சென்ற நடிகரிடத்தில் இருந்து ஒரு போன் கால் கூட இல்லையாம். ஆனால் தொகுப்பாளினியோ தனது எக்ஸ்ட்ரீம் கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறாராம். இதைப் பார்த்த தயாரிப்பாளரோ, இவங்க கூத்தடிக்க நம்மதான் பணம் கட்டனுமா? ரொம்பவும் நாணயமாக நடந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகளை வைத்து படம் தயாரிக்க எல்லாம் ஒரு தனி கொடுப்பனை வேண்டும் என வருத்தத்தில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications