நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
சென்னை: வெளியே சிரித்து நடித்தாலும் இந்த முறை ஏற்பட்ட படுதோல்வியை அந்த வி நடிகரால் ஜீரணிக்கவே முடியவில்லை என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த படம் தோல்வியை தழுவியதில் இருந்தே பாரிலேயே அதிக நேரத்தை செலவழித்து வருகிறாராம்.
அழகில் எந்தவொரு குறையும் இல்லை என்றாலும் நாம தான் கெத்து என்கிற திமிர்த்தனம் அதிகமாகவே அந்த நடிகருக்கு இருப்பது தான் அவரால் வெற்றியை ருசிக்க முடியாமல் போக காரணம் என சினிமா வட்டாரத்திலேயே பலரும் பேசி வருகின்றனர்.

அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தவறான ஆலோசனைகள் காரணமாக சரியான படங்களை தேர்வு செய்யாதது தான் அந்த நடிகரின் சரிவுக்கு காரணம் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
நடிகைகள் சகவாசம்: படப்பிடிப்பு நாட்களில் அதிகமாக நடிகைகளுடன் சகவாசம் வைத்துக் கொண்டு சரியாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் வீணடித்து வருவதும் அந்த நடிகர் படங்கள் படமாக உருவாகும் போதே பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது என்கின்றனர். ஜாலியாக இருக்க மட்டுமே ஆசைப்படும் அந்த நடிகர் ரிஸ்க் எடுத்து மற்ற நடிகர்கள் போல லுக் எல்லாம் மாற்றி கடுமையான உழைப்பை போட்டு நடிப்பதை அதிகம் விரும்புவதில்லை. அதனாலே அவரது படங்களை பார்க்க ரசிகர்களும் விரும்புவதில்லை எனக் கூறுகின்றனர்.
ஒரே மாதிரியான நடிப்பு: சினிமாவில் படத்துக்கு படம் நடிகர்கள் வித்தியாசம் காட்டி கடுமையாக உழைத்து வருகின்றனர். அப்படியே கேரவனில் எப்படி ஏசி போட்டு ஜாலியாக இருக்கிறாரோ அதே போல ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கொஞ்சம் கூட வியர்த்து விடக் கூடாது என்கிற கொள்கையுடன் நடித்து வந்தால் பின்னர் வெற்றி எப்படி தேடி வரும் என சக நடிகர்களே கலாய்த்து வருகிறார்களாம்.
பாரிலேயே குடித்தனம்: இந்த முறையாவது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் படத்தை கொடுத்து கம்பேக் கொடுக்கலாம் என நினைத்த நடிகருக்கு படுதோல்வி படமாக புதிய படம் மாறிய நிலையில், பாரிலேயே டெண்ட் போட்டு குடித்தனமே செய்து வருகிறார் அந்த இளம் நடிகர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அழுது புலம்பல்: இனிமேல் புதிய படங்களில் நடித்தாலும் இதே நிலைமை தான் ஏற்படும். அதற்கு ஏன் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டும் என தனது மேனேஜரிடமே அழுது புலம்பி நடிகர் பேசியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்த படத்தின் கதையை முழுமையாக தானே கேட்டு தேர்வு செய்து நடிக்கவும் நடிகர் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











