அந்த துரோகத்தை மறக்காத நடிகர்.. மற்ற நடிகைகளுக்கு க்ரீன் சிக்னல்.. எக்ஸ்-க்கு மட்டும் ரெட் தானாம்!

By Staff

சென்னை: காதலிப்பது போல நடித்து ஏமாற்றியதால் ரொம்பவே மனம் உடைந்து போனார் அந்த நடிகர்.

இப்படியே முடங்கி விடாதே, சினிமாவில் உனக்கான எதிர்காலம் இருக்கிறது என அவருக்கு அறிவுரை வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவரை காதலித்து பின்னர் பிரிந்து சென்றவரும் நடிகையாக வலம் வரும் நிலையில், அவருடன் மட்டும் இணைந்து நடிக்கக் கூடாது என உறுதியாக உள்ளாராம்.

டிராமா காதல்

டிராமா காதல்

அந்த பிரபலமான ரியாலிட்டி ஷோவில் சந்தித்துக் கொண்ட இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலில் விழுந்தனர். ஆனால், வழக்கம் போல ஷோவுக்கு பிறகு ஒவ்வொரு சீசனிலும் நடப்பது போலவே இந்த சீசனிலும் காதல் டிராமா முடிவுக்கு வந்த நிலையில், ரசிகர்கள் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், அந்த நடிகர் உண்மையிலேயே சின்சியராக அந்த நடிகையை காதலித்தாராம்.

தாங்க முடியாத பிரிவு

தாங்க முடியாத பிரிவு

நடிகையின் பிரிவு அந்த நடிகரை ரொம்பவே வாட்டி எடுத்து விட்டதாம். அதன் காரணமாக சினிமாவில் கூட பெரிதாக அக்கறை இல்லாமல் இருந்தவருக்கு மீடியாவை சேர்ந்த அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் கொடுத்த ஆறுதலான அறிவுரைகளால் தான் மீண்டும் சினிமாவில் முழு கவனத்தை நடிகர் செலுத்தி சிறப்பான இடத்திற்கு முன்னேறி வருகிறார்.

ஹீரோயின் ஆனாலும்

ஹீரோயின் ஆனாலும்

ஆனால், அந்த நடிகை ஹீரோயின் ஆனாலும், இன்னமும் அவருக்கு ஒரு நல்ல ஹிட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்தடுத்து வெளியான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் அரை டஜன் சீரியல் நடிகைகள் சினிமா ஹீரோயின்களாக மாறிய நிலையில், அவருக்கான புதிய வாய்ப்புகள் முற்றிலும் கை விட்டுப் போயுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகருடன் இணைந்து

நடிகருடன் இணைந்து

இந்நிலையில், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஹிட்டான காதல் ஜோடி சினிமாவில் இணைந்து நடித்தால் படம் வெற்றி பெறும் என நடிகை மட்டுமின்றி சில இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ரொம்பவே ஆசைப்பட்டு நடிகரிடம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் நினைத்தது கடைசி வரை நடக்காது என்பது போன்ற தகவல்கள் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அந்த நடிகை வேண்டாம்

அந்த நடிகை வேண்டாம்

தன்னை விட்டு பிரிந்து சென்ற அந்த நடிகையுடன் மட்டும் இனி எப்போதுமே இணைந்து நடிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளாராம் அந்த நடிகர். மற்ற யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாக போடுங்கள், எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அவர் மட்டும் வேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாராம்.

முயற்சி வீண்

முயற்சி வீண்

நேரடியாக அந்த நடிகை நடிகரிடம் அணுகாமல் மற்றவர்கள் மூலமாக நடிகருடன் இணைந்து நடிக்க போட்ட தூண்டில்தான் இது என்கின்றனர். ஆனால், நடிகை எடுத்த சமாதான முயற்சி இப்படி வீணாகி போய் விட்டதே என்றும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இப்போ இல்லைன்னாலும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் பலரது விருப்பமாக உள்ளதாம்.

ரிப்பீட் வேண்டாம்

ரிப்பீட் வேண்டாம்

அதே நேரத்தில் தனது ஒவ்வொரு படத்திற்கும் புதிய நடிகைகளை ஹீரோயினாக போடவும் கோரிக்கை வைத்திருக்கிறாராம். ஒரே நடிகையுடன் மீண்டும் மீண்டும் நடித்தால், தேவையில்லாத பேச்சுக்கள் வரும் என்றும், முன்னாள் காதலியுடன் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்கு சினிமாவை சின்சியராக பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் என கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X