புயல் மழையிலும் அந்த போதை போகல.. நடிகையுடன் ரூம் போட்ட நடிகருக்கு நேர்ந்த கதி.. என்ன ஆச்சு?
சென்னை: மிக்ஜாம் புயல் மிச்சம் வைக்காமல் சென்னையை சூறையாடிய நிலையில், இந்த நேரத்திலும் துணை நடிகையுடன் பிரபல நடிகர் ஒருவர் ரூம் போட்டு லூட்டி அடிக்க நினைத்துள்ளாராம். ஷூட்டிங் எல்லாம் இல்லை என்பதால், ஜாலியாக இருக்கலாம் என பிரபல ஹோட்டலில் ரூம் போட்டு ஜல்சா செய்ய நினைத்த நடிகர் கடைசியில் தேவையில்லாமல் வந்து மாட்டிக் கொண்டோமே என புலம்பி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சென்னையில் பல இடங்களில் இன்னமும் தண்ணீர் வடியாமலும் பவர் வராமலும் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு ரத்து என்பதால் இளம் நடிகர் ஒருவர் துணை நடிகையை தான் தங்கியிருக்கும் ரூமுக்கு வர வழைத்து உள்ளார்.
நடிகரின் ஜாலி பிளான்: அந்த துணை நடிகையுடன் சரக்கடித்து விட்டு இரவு முழுவதும் ஜாலி பண்ண வந்துள்ளார் நடிகர். புயல், மழை எல்லாம் தன்னை ஒன்றும் பண்ணாது என்றும் அடுக்கு மாடி ஹோட்டல் என்பதால் ஹேப்பியாக மேல் மாடியில் ரூம் போட்டு சந்தோஷமாக இருந்த அந்த நடிகருக்கு கடைசியில் சங்கடமான சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
மாட்டிக்கினாரு ஒருத்தர்: ஆனால், அவர் தான் இருக்கும் ஏரியாவில் எல்லாம் மழை வெள்ளம் வராது என்றும் லேசாக மழை பெய்து விட்டு போய் விடும் என நினைத்த நிலையில், இரவு நேரத்திலேயே கரன்ட் கட் ஆகி விட்டதாம். மேலும், கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அந்த ஹோட்டலை விட்டு வெளியே கூட செல்ல முடியாத சூழலில் நடிகர் சிக்கித் தவித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
2 நாள் அவதி: ஹோட்டல் ஜெனரேட்டரும் வேலை செய்யாமல் போய் விட, உள்ளேயும் இருக்க முடியாமல், வெளியேவும் வர முடியாமல் நடிகர் மாட்டிக் கொண்டு இரு நாட்களாக தவித்து வருகிறார் என்றும் போன் செய்து உதவியாளரை அழைத்து தப்பிக்கலாம் என பார்த்தாலும் சிக்னல் கிடைக்காமல் நடிகரை வச்சு செய்து விட்டதாக கூறுகின்றனர். முன்பே இப்படி ஆகும் என தெரிந்து இருந்தால், வெளியூருக்கு பறந்து இருப்பேனே என நடிகர் புலம்பி தவித்து வருகிறாராம். அதிக பணம் கிடைக்கும் என நடிகரை நம்பி வந்த துணை நடிகையின் நிலைமையும் படுமோசமாக மாறி விட்டதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











