டவல் வரைக்கும் போயிட்டானுங்க.. அடுத்து அசிங்கம் தான்.. வக்கிரவாதிகளால் தவிக்கும் இளம் நடிகை?

By Staff

சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளை அழகாக காட்டினால் அவர்களே ரசிக்கத்தான் செய்வார்கள். ஆனால், எந்தளவுக்கு தத்ரூபமாக ஏஐ மூலமாக ஒருவரது முகத்தையும் உடல் அசைவுகளையும் கொண்டு வர முடிகிறதோ அந்தளவுக்கு பேராபத்தும் ஒளிந்திருக்கிறது என்பதை அந்த இளம் நடிகை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.

தொடர்ந்து இதுபோன்ற டீப் ஃபேக் எடிட் வீடியோக்களும் புகைப்படங்களும் நடிகையை ரொம்பவே பாடாய்ப்படுத்தி வரும் நிலையில், இதற்கு எதிராக என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிடுங்கி நிற்பதாக பிரபல நடிகர் ஒருவரிடமே முறையிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Young Actress afraid of deep fake edit with her face and asking help to a Popular Actor

இன்று நடிகைகளின் புகைப்படங்களை இப்படி ஏஐ மூலம் மாற்றி தங்கள் காம இச்சையை போக்கிக் கொள்ளும் வக்கிரவாதிகள், நாளை சோஷியல் மீடியாவில் கொட்டிக் கிடக்கும் குடும்பத்து பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் என பலரையும் விடாது ஆபாசமாக சித்தரித்து மிகப்பெரிய அழிவை கொண்டு வந்து விடுவார்கள் என்றே கூறியுள்ளாராம்.

அத்துமீறும் ஏஐ: அச்சு அசல் பிரபல நடிகரின் முகத்தை அவர் போடாத கெட்டப்பில் உருவாக்கி தருகிறது ஏஐ. புகைப்படங்களை தாண்டி அதை வீடியோவாகவும் உருவாக்க முடிகிறது. நடிகர்களை மாவீரர்களாக உருவாக்கி வரும் ரசிகர்களின் பிராம்ப்ட்டை காப்பி அடித்து நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து தொடர்ந்து தங்கள் காம இச்சையை மட்டுமின்றி சோஷியல் மீடியாவில் உள்ள வக்கிரவாதிகளுக்கும் கவர்ச்சி தீனி போட்டு வருகின்றனர்.

நடிகைகளே பண்றாங்களே: பிகினி உடைகளிலும், படு கவர்ச்சியான உடைகளிலும் டாப் ஹீரோயின்களே ஐட்டம் பாடலுக்கு ஆடுறாங்களே என்றும் நாங்க பண்ணா என்ன தப்பு என சில நெட்டிசன்கள் வாக்குவாதம் செய்யும் அளவுக்கு தாங்கள் செய்யும் கேவலமான செயலை நியாயப்படுத்தி வருகின்றனர். நடிகைகளை தாண்டி பொதுமக்கள் இந்த ஏஐ எடிட்கள் மூலம் பாதிக்கப்படும் போது தான் பலருக்கும் இதன் வலியும் வேதனையும் புரியும் என இளம் நடிகை ஒருவர் பிரபல சீனியர் நடிகரிடம் முறையிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சைபர் நடவடிக்கை தேவை: நடிகைகள் டவல் மட்டுமே கட்டிக்கொண்டு பாத்ரூமில் இருப்பது போன்ற புகைப்படங்களை ஏஐ மூலம் உருவாக்கியுள்ள நிலையில், ஆபாச வீடியோக்களிலும் நடிகைகள் இருப்பது போல டீப் ஃபேக் வீடியோக்கள் உருவாகிவிடும் என்றும் சில வீடியோக்கள் ஏற்கனவே உருவாகி விட்டது என்றும் சைபர் நடவடிக்கையை எடுக்க அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என அந்த பிரபல நடிகரிடம் நடிகை கோரிக்கை வைத்துள்ளதாகவும், நடிகர் இந்த விவகாரம் தொடர்பாக கவனிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X