கோலிவுட்டுக்கு கோடி கும்பிடு.. அடுத்த அடுத்த படங்களுக்கு நோ சொல்லும் லீலை நடிகை.. என்ன மேட்டர்?

By Staff

சென்னை: கோலிவுட்டில் பொதுவாக மலையாள நடிகைகள் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாகும் நடிகைகள் எல்லாம் நடிக்க வந்தால் இங்கேயே செட்டில் ஆகி விடலாம் என்று தான் இத்தனை ஆண்டுகளாக நினைத்து பல பேர் லேடி சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் கொடிகட்டி பறந்தாங்க. இளம் நடிகைகளுக்கு இங்கே எப்போதும் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமும் மார்க்கெட்டும் கை நிறைய சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமாவின் முகமே ரொம்பவே மாறியிருப்பதாக பக்கத்து ஸ்டேட் அம்மணிகள் பயந்து நடுங்கி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோலிவுட்டில் எப்படியாவது மாஸ் நடிகர் அல்லது டாப் நடிகர் படங்களில் நடித்தாக வேண்டும் என பல இளம் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பி வந்த காலமெல்லாம் மலையேறி விட்டது என்கின்றனர்.

Young Actress avoid many films in Kollywood due to some big fear

அதிலும், தற்போது ஒரே ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தம் ஆன அந்த லீலை நடிகை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கோலிவுட்டில் இருந்து கதவை தட்டி வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக இழுத்து சாத்தி விட்டாதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

அரசியல் தலையீடு: பொழுதுபோக்குத் துறையாக இருந்து வந்த கோடம்பாக்கம் சினிமா சமீப காலமாக ரொம்பவே அரசியல் தலையீடுகளால் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருப்பதாக மற்ற மாநிலங்களில் ஹெவியான பேச்சுக்கள் கோலிவுட் குறித்து அடிபடத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி இங்கே நடிக்க வரும் நடிகைகளுக்கு ஒரு சில நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களால் பல்வேறான தொல்லைகளை சந்திக்கவும் நேரிடுவது குறித்து அறிந்த நடிகை அப்படியே நைஸாக நழுவிக் கொள்ள முயற்சித்து வருகிறாராம்.

பாலிவுட் பக்கம்: ஏற்கனவே கிரஷ் நடிகை தென்னிந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்தாமல் பாலிவுட் பக்கம் சென்று பக்காவாக செட்டில் ஆகியுள்ள நிலையில், அவரையே ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அதே டிராக்கில் பயணித்து வரும் லீலை நடிகையும் ஏஜென்ட்டுகள் மூலமாக பல பட வாய்ப்புகளை இந்தியில் அள்ளி வருகிறார் என்கின்றனர்.

கோலிவுட்டே வேண்டாம்: பெரிய படத்தில் அறிமுகமாகவுள்ள நடிகை முதல் படத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சைகளையும் சிக்கல்களையும் சந்தித்த நிலையில் தான் தொடர்ந்து இங்கே பயணம் செய்வது நினைத்ததை விட எளிமையானதாக வருங்காலங்களில் இருக்காது என்பதை புரிந்துக் கொண்டாராம். இன்னொரு இளம் நடிகை சமீபத்தில் வந்து பல படங்களில் கமிட் ஆகி பெயரை கெடுத்துக் கொண்டதையும் உணர்ந்துக் கொண்ட லீலை நடிகை கால்ஷீட் கேட்கும் கோலிவுட் பிரபலங்களுக்கு கோடி கும்பிடு போட்டு வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X