கோலிவுட்காரர்களுக்கு தண்ணி காட்டும் சேச்சி நடிகை
சென்னை: சங்கத் தலைவர் படத்தில் நடித்த சேச்சி நடிகை கோலிவுட்காரர்களுக்கு தண்ணி காட்டுகிறாராம்.
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த சேச்சி நடிகை மலையாள படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு அவர் சங்கத் தலைவரின் படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார்.
தெலுங்கு திரையுலகம் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று கொண்டாடுகிறது. அதனால் அம்மணியின் முழு கவனமும் தெலுங்கு படங்கள் மீது தான்.
தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் யாராவது அவரை அணுகினால் பிடி கொடுக்காமல் பேசுகிறாராம். சம்பளமும் ஓவராக கேட்கிறாராம். இது போன்று நாங்கள் பலரை பார்த்துவிட்டோம், கோலிவுட் பக்கம் வராமலா போய்விடுவீர்கள் என்று அவரை தேடிச் சென்று திரும்பி வந்த ஆட்கள் கூறுகிறார்களாம்.
தெலுங்கில் மவுசு உள்ளபோதே சம்பாதித்துக் கொள்ளப் பார்க்கிறார் நடிகை.
Comments


Click it and Unblock the Notifications