ஸ்ட்ரெய்ட்டா சூனாபானா ஆக ஆசைப்படும் இளம் நடிகை
சென்னை: சித்திரமான நடிகை நேரடியாக சூனா பானா ஆக ஆசைப்படுகிறார்.
டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியுள்ளார் சித்திர நடிகை. அவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். திடீர் திடீர் என ரசிகர்களின் வீட்டுக்கு எல்லாம் சென்று இன்ப அதிர்ச்சி அளிக்கிறார்.

டிவி நிகழ்ச்சிக்கு பிறகு கோலிவுட்டில் நடிகைக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் அம்மணி தனது சம்பளத்தை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 60 லட்சமாக உயர்த்திவிட்டார்.
இருப்பினும் அவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் அவர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.
வர வர கோலிவுட்டில் எல்லோருமே சர்ச்சை நடிகை போன்று ஆக ஆசைப்படுகிறார்கள். சர்ச்சை நடிகை கவர்ச்சி, துக்கடா கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தவர். வளர்ந்து தனக்கு என ஒரு பெயர் எடுத்த பிறகே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











