ராசியில்லாத நடிகைன்னு முத்திரை குத்திட்டாங்களா?.. ஹீரோ எஸ்கேப்பு.. சிக்கிய குயில்.. ரொம்ப பாவம்!
சென்னை: சின்ன குயில் நடிகை நடித்த படங்கள் எல்லாம் வெளியாகாமல் சிக்கித் தவித்து வரும் நிலையில், ஹாட்ரிக் வெற்றி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் ஹாட்ரிக் தோல்வியைத் தான் சந்திக்கப் போகிறார் என இப்போதே கட்டம் கட்டி அவரை ராசியில்லாத நடிகைகள் பட்டியலில் சேர்த்து விட்டார்கள் சில தயாரிப்பாளர்கள் என திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
சினிமா உலகில் என்னதான் புரட்சிகரமான படங்களையும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான படங்களை கொடுத்தாலும், காசு போடும் தயாரிப்பாளர்கள் பூஜை போடுவதில் இருந்து ஒவ்வொரு தேதியையும் ஜோசியம் பார்த்து குறிப்பது என முகராசி, கைராசி என மூடநம்பிக்கையில் தான் ஊறிக்கிடக்கின்றனர் என்கின்றனர்.

வழக்கம்போல ஹீரோக்கள் என்னதான் ஃப்ளாப் படங்களை கொடுத்தாலும், எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். பாவம் இந்தமுறையும் ஒரு இளம் குயில் தான் சிக்கிவிட்டதாம்.
படமும் வரல.. வந்தாலும் ஓடல: அந்த சின்ன குயில் நடிகை நடித்த படங்கள் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால், ஒரு படமும் எதிர்பார்த்தது போல வரவில்லை. அதே போல வெளியான படங்களும் படுதோல்வியை சந்தித்து வந்த வேகத்தில் ஓடிடிக்கு ஓடி வரும் சூழல் நிலவியதால் அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் வருவது அப்படியே ஸ்டாப் ஆகிவிட்டதாக திடுக்கிட வைக்கின்றனர்.
கதறும் குயில் நடிகை: பெரிய ஹீரோ, பெரிய பேனர் என பக்காவாக பிளான் பண்ணி பெரிய ஸ்டாராக திட்டமிட்ட நிலையில், இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களின் சொதப்பல்கள் காரணமாக தனது படங்கள் வெளியாகாமலும், வெளியான படங்கள் ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல்லாக ஓடாமல் போனதற்கு நான் தான் காரணமா? அந்த ஹீரோ எல்லாம் காரணம் கிடையாதா? இந்த இண்டஸ்ட்ரியில் பெண்களுக்கு மதிப்பே இல்லை என கதற ஆரம்பித்து விட்டாராம்.
மொத்தமும் போச்சு: பக்கத்து ஸ்டேட்டில் இருந்து கோலிவுட் பக்கம் வரத் துடித்த நடிகைக்கு இங்கே உள்ள தயாரிப்பாளர்கள் எல்லாம் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்திவிட இந்த தகவல் பக்கத்து ஸ்டேட் வரை பரவி விட்டதாம். இதனால், அங்கேயும் நடிகையை இப்போதைக்கு யாருமே சீண்ட மாட்டார்கள் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications