திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட நடிகை திட்டம்
சென்னை: இளம் நடிகை ஒருவர் விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்க முடிவு செய்துள்ளாராம்.
பெரிய கனவுகளுடன் நடிக்க வந்தார் அந்த நடிகை. வந்த வேகத்தில் அவரின் நடிப்புத் திறனுக்கு மதிப்பு கிடைத்தது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று முன்னணி நடிகையாக முடியவில்லை. நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயர் மட்டுமே கிடைத்தது.

இதற்கிடையே சொந்த பிரச்சனையால் கெரியர் பாதிக்கப்பட்டது. பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த அவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது என்றாலும் பெரிதாக இல்லை.
இந்நிலையில் தான் அவர் விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறாராம். அவர் யாரை திருமணம் செய்யப் போகிறார் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
நடிகையின் வாழ்வில் காதலும் வந்து போயுள்ளது. இன்னும் அவர் நினைப்பிலேயே இருக்கும் அந்த நபரை திருமணம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications










