பழைய பிட்டு போட்டோக்களை டெலிட் செய்த பாப்பா நடிகை.. இமேஜ் டேமேஜை சரி பண்ண சீன் போடுறாராம்!
சென்னை: கோலிவுட் பக்கம் வந்த வேகத்திலேயே பிரபலமான அந்த பாப்பா நடிகை அதிரடியாக பல பெரிய படங்களில் கமிட் ஆக காத்திருந்தார். ஆனால், அதற்கு முன்பாக அவர் நடத்திய பிரைவேட் பார்ட்டி மற்றும் நைட் சேட்டைகள் அம்பலமான நிலையில், நடிகையை புக் செய்ய வேண்டாம் என சில தயாரிப்பாளர்கள் சட்டென முடிவு செய்தது நடிகையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றும் தன்னைப் பற்றி வீண் வதந்திகள் தான் பரவின என நடிகை எவ்வளவோ முட்டுக் கொடுக்க பார்த்த நிலையிலும், யாருக்கு காதுகுத்தப் பார்க்குற? உன் இன்ஸ்டாவுல அவ்வளவு ஆபாச எழவுகளும் இருக்கே என ஒரு தயாரிப்பாளர் ஸ்மார்ட் போனை எடுத்து ஆதாரத்துடன் காட்ட, அம்மணியால் எதுவும் பேச முடியவில்லையாம்.

தனது அறையை பூட்டிக் கொண்டு ஓவென கதறி அழுத நடிகையை தேற்றிய பிரபலம் ஒருவர் கொடுத்த டிப்ஸ்களை தற்போது தொடர்ந்து நடிகை பின்பற்றி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
இனிமே அதுக்கு நோ: கோலிவுட்டில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற தீவிர முயற்சியில் நடிகை ரொம்பவே வேகம் காட்டி வருகிறார். ஆனால், ஆரம்ப காலக்கட்டத்தில் ஆடையே இல்லாமல் நடித்தும், பிகினி உடைகளில் நடித்தும் எல்லை மீறி இருந்தார். ஆனால், தற்போது அதுக்கெல்லாம் நோ சொல்லி வருகிறாராம் நடிகை.
இமேஜ் டேமேஜ் ஆகிடுச்சு: நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களும், இட்லி டிரெஸ் கில்மா புகைப்படங்களும் நிறைந்து இருந்த நிலையில் அதையெல்லாம் பார்த்து தான் சில பக்கத்து ஸ்டேட் கிளாமர் பிரியர்கள் நடிகைக்கு சான்ஸ் கொடுத்து ஹீரோயினாக மாற்றினர். ஆனால், அம்மணி கோலிவுட் பக்கம் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றால் சில கண்டிஷன்ஸை ஃபாலோ பண்ண வேண்டிய சூழலில் தற்போது டேமேஜ் ஆன இமேஜை சரி செய்து வருகிறாராம்.
எல்லாமே டெலிட்: தனது இமேஜை சரி செய்து பல தமிழ்ப் படங்களில் நடிக்க என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுத நடிகைக்கு, சினிமா பிரபலம் ஒருவர், இன்ஸ்டாகிராமில் உள்ள பழைய கில்மா போட்டோக்களை நீக்கிடுங்க, சுடிதார் அணிந்தும், பாவாடை தாவணி, சேலை என இந்த ஊர் ஸ்டைல் போட்டோக்களையும் வீடியோக்களையும் போடுங்க, ஆட்டோமேட்டிக்காக உங்க இமேஜ் மாறிவிடும், பட வாய்ப்புகள் வரிசை கட்டிவிடும் என்று ஐடியா கொடுக்க பாப்பாவும் அதை ஃபாலோ பண்ணி தனது பழைய பிகினி போட்டோக்களை மொத்தமாக தூக்கி விட்டார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











