அவசரப்பட்டு பேட்டி கொடுத்த நடிகை: என்ன ஆகப் போகுதோ?
சென்னை: இளம் நடிகை ஒருவருக்கு சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்கும் ஆசை உள்ளதாம். இப்படி ஆசைப்பட்டவர்களின் நிலை அவருக்கும் ஏற்படாமல் இருந்தால் சரி.
நடிக்க வருபவர்களும் சரி, நடித்துக் கொண்டிருப்பவர்களும் சரி சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்கள். அப்படி சர்ச்சை நடிகையின் இடத்தை பிடித்துக் காட்டுகிறேன் பார் என்று வீர வசனம் பேசிய நடிகையின் மார்க்கெட் டல்லடித்துவிட்டது.

சர்ச்சை நடிகையை காலி செய்கிறேன் என்று கூறிய மற்றொரு நடிகைக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில் புதிதாக நடிக்க வந்துள்ள நடிகைக்கும் சர்ச்சை நடிகையின் இடம் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க வேண்டும் என்று வாய் விட்டு கூறும் நடிகைகளின் கெரியர் மோசமாகிவிடுகிறது. இந்த இளம் நடிகையின் கெரியர் என்னவாகப் போகிறதோ?
தன்னை பற்றி எந்த நடிகை மோசமாக பேசினாலும் சர்ச்சை நடிகை அவசரப்பட்டு பதில் அளிப்பது இல்லை. அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










