எல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்?
சென்னை: இளம் நடிகை ஒருவர் தன்னை பொதுவெளியில் சிலர் தாக்கியதாக கூறிய சம்பவத்துக்கு பின்னால் அப்படி ஒரு விஷயம் உள்ளதாம்.
உள்ளாடை அணிந்து கொண்டு அந்த நடிகை உடற்பயிற்சி செய்ததால் தாக்கப்பட்டார் என பலரும் அவருக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர்.
ஆனால், விஷயமே வேறு என அந்த இடத்தில் இருந்த சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளன.

பெருசா ஓடவில்லை
அந்த ஒரு படத்தில் துணை நடிகையாக நடித்து மட்டுமே பிரபலமானவர் அந்த இளம் நடிகை. மற்றபடி அவர் நடித்த எந்தவொரு படமும் பெருசா ஒண்ணும் ஓடவே இல்லை என்கின்றனர். தனக்கு பிரபலத்தை தேடிக் கொள்ள அப்பப்போ இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருவது தான் அவரது வாடிக்கை என்கின்றனர்.

யாரை அடித்தார்
உள்ளாடை அணிந்து உடற்பயிற்சி செய்ததற்காக தன்னையும் தனது நண்பர்களையும் அந்த நபர்கள் கொடூரமாக தாக்கினார் என வீடியோ வெளியிட்டு, ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் அந்த நடிகை திருப்பினார். ஆனால், அந்த வீடியோவிலே அந்த நடிகை தாக்கப்படாமல், அவரது தோழிகளை தாக்கிய வீடியோ தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வேண்டுமென்றே கழட்டி
அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு கெட்ட ஆட்டம் போட்டிருந்த குழுவினரை அமைதி காக்க சொல்லும் போது நடந்த வாக்குவாதம் தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்கின்றனர். அதனை திசை திருப்பும் விதமாக, உடனடியாக தனது டி சர்ட்டை கழட்டி உள்ளாடையுடன் வீடியோ வெளியிட்டு பிளேட்டையே அந்த நடிகை மாற்றி விட்டதாக தகவல்கள் தற்போது கசிந்து வருகின்றன.

எல்லாமே டிராமா
டி சர்ட் அணிந்து கொண்டு இருந்த அந்த நடிகையின் நண்பர்கள் ஏன் தாக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும், உடனடியாக இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவை எப்படி போட்டார் என்ற கேள்வியும் சமூக வலைதளத்தில் எழுந்து வருகின்றன. எல்லாமே அந்த நடிகை செய்த இன்ஸ்டன்ட் டிராமா தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

புஸ்வாணம்
சரவெடி போல இந்த விவகாரம் தொடரும் என்று பார்த்தால், புஸ்வாணம் போல சப்பென்று முடிந்து விட்ட தகவலை அறிந்ததும், அவருக்காக குரல் கொடுத்த போராளி பிரபலங்களும், கப்சிப் என அந்த விவாகரத்தில் தலையிட்டுக் கொள்ளாமல், ஒதுங்கி விட்டார்களாம். பாவம் அந்த நடிகை போட்ட கணக்கு தப்பாகி விட்டதே என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











