அந்த இளம் டிவி நடிகரின் அழகில் மயங்கிய நடிகை.. கல்யாணம் ஆனது பற்றியெல்லாம் கவலை இல்லையாம்?
சென்னை: கல்யாணமான டிவி நடிகர் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், அவருடன் படத்தில் இணைந்து நடித்த நடிகை ரொம்பவே ரீலை தாண்டி ரியலிலும் ஒட்டி உரச ஆரம்பித்து விட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருந்த அந்த நடிகருக்கு அவரது மனைவி இதுநாள் வரை ரொம்பவே உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார்.
தனது நகைகளை கூட கொடுத்து நடிகருக்கு பல நேரங்களில் உதவி செய்திருக்கிறாராம். மனைவியுடன் அன்பாக வீட்டில் இருந்து வரும் நடிகர் சினிமாவில் நடிப்பதற்காக ஹீரோயின்களிடம் நெருங்கி பழக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

ஹீரோவுக்கு வலை வீசிய நடிகை: படங்களில் நெருக்கமான காட்சிகள், முத்தக் காட்சிகளில் நடித்த நடிகைக்கு ஹீரோ மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது என்கின்றனர். அடிக்கடி ஹீரோவை வெளியே அழைத்துச் செல்வது, பார்ட்டிகளுக்கும் பப்களுக்கும் இரவு நேரங்களில் அவருடன் நேரத்தை செலவிடுவது என நடிகை நெருக்கமாக பழக ஆரம்பித்து இருக்கிறார்.
ஷாக்கான மனைவி: தனது கணவரிடம் மற்ற நடிகைகளோ, சின்னத்திரை பிரபலங்களோ இதுவரை நெருங்கி பழகாத நிலையில், இந்த நடிகை எல்லை மீறி பழகி வருகிறாரே தினமும் பல மணி நேரம் போனில் பேசுகிறாரே என கொஞ்சம் கொஞ்சமாக மனைவிக்கு சந்தேகம் கிளம்பிய நிலையில், நடிகர் மற்றும் அந்த நடிகை பற்றி ஒரு விஷயம் சமீபத்தில் மனைவியின் காதுகளில் விழ அவர் அப்படியே ஷாக் ஆகி விட்டார் என்கின்றனர்.
நடிகையுடன் ரகசிய குடித்தனம்: பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக் கொள்ளாமல் இருக்குமா? நடிகை ரொம்பவே நெருக்கம் காட்டி தன்னுடன் பழகுவதை புரிந்துக் கொண்ட நடிகர் தனது மனைவிக்கு தெரியாமல் அந்த நடிகையுடன் ரகசியமாக குடித்தனமே நடத்தி வருகிறார் என பகீர் கிளப்பி உள்ளனர். இந்த தகவல் நடிகரின் மனைவியின் காதுகளுக்கு வந்து சேர்ந்த நிலையில் தான் அவர் அதிர்ச்சியாகி விட்டார் என்கின்றனர்.
கல்யாணமானாலும் கவலையில்லை: நடிகரின் மனைவி தனியாக அந்த நடிகையிடமே பேசிவிட்டாராம். அவர் என் கணவர் என்றும் தங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகின்றன என நடிகரின் மனைவி சொல்ல, அதெல்லாம் தெரிந்து தான் பழகுகிறேன். எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு, அவருடன் தான் வாழப் போகிறேன். உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கொள் என்றே சவால் விட்ட நிலையில், நடிகரிடம் இந்த பிரச்சனையை எப்படி கொண்டு செல்வது, தன்னை விட்டு கணவர் பிரிந்து சென்று விடுவாரோ என்கிற அச்சத்தில் அந்த நடிகரின் மனைவி இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











