தம்பி உன் ஆட்டம் இனி செல்லாது.. மகளை மடக்க முயற்சித்த ஒல்லி நடிகருக்கு அட்வைஸ் பண்ண நடிகையின் அப்பா!
சென்னை: அந்த பெரிய 'பிராண்ட்' தான் இங்கே உனக்கு அட்ரஸ் ஆக இருந்தது. ஆனால், இதற்கு மேல் அதற்கு வாய்ப்பில்லை தம்பி, இருக்கும் இடத்தை விட்டு பறக்க ஆசைப்படாதே என நடிகையின் அப்பா ஒல்லி நடிகருக்கு அட்வைஸ் செய்துள்ளாராம்.
தயாரிப்பாளராக தென்னிந்தியாவில் அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வருகிறார் அந்த பிரபலமான நபர்.
அவரது மகள் இளம் நடிகையாக வளர்ந்து வரும் சூழலில் ஒல்லி நடிகரின் கண் அவர்மீது தொடர்ந்து விழுந்து வருவது தயாரிப்பாளர் அப்பாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.

வாய்ப்புக்கு காரணம்
கோலிவுட்டில் சாதாரண நடிகராக சுற்றித் திரிந்த அந்த நடிகருக்கு பாலிவுட் வரை வாய்ப்புகள் அவரது திருமணத்துக்கு பிறகு கிடைத்த வரப் பிரசாதம் தான் என்கின்றனர். மாமனாரின் புகழ் காரணமாக செல்லும் இடமெல்லாம் ஒல்லி நடிகருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு விரிக்கப்பட்டது. தன்னுடைய நடிப்புத் திறமையை பயன்படுத்தி கிடைத்த வாய்ப்பை கப்பென பிடித்துக் கொண்டார்.

அங்கும் ஃபிளாப்
ஆனால், ஆரம்பத்தில் ஒரே ஒரு லாட்டரியில் மட்டும் பரிசு விழ, அதற்கு அடுத்து அவர் கிழித்த லாட்டரியில் எல்லாம் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்பது போலவே பல்பு வாங்க ஆரம்பித்தார். ஆனாலும், தொடர்ந்து லாட்டரி அவருக்கு கிடைக்க காரணமாக இருந்தவரையே விட்டு விலகியது தான் தற்போது அவருக்கு மிகப்பெரிய இழப்பாக மாறி உள்ளதாம்.

வாரிசு நடிகையை மடக்க
பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துள்ள அந்த ஒல்லி நடிகரின் பார்வை தற்போது முழுவதுமாக அந்த வாரிசு நடிகை மீது தான் விழுந்திருக்கிறதாம். ஏற்கனவே சில படங்களுக்கு அவரை எப்படியாவது புக் பண்ணிட வேண்டும் என நினைத்து ஒல்லி நடிகர் நகர்த்திய மூவுக்கெல்லாம் அந்த நடிகையின் அப்பா செக் வைத்து வந்த நிலையில், சமீபத்தில் அவரிடமே நேரடியாக அணுகி இருக்கிறாராம் அந்த ஒல்லி நடிகர்.

வாய்ப்பே இல்லை
ஒல்லி நடிகர் நேரடியாக வைத்த கோரிக்கைக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை என அதிரடியாக மறுத்து விட்டாராம் அந்த நடிகையின் அப்பா. அதற்கு காரணம் இண்டஸ்ட்ரியில் நடிகருக்கு இருக்கும் சில கெட்டப் பெயர்கள் தான் என்கின்றனர்.

ஆட்டம் செல்லாது
தனது மகளுடன் நடிக்கும் ஆசையை விட்டு விடு என்று கூறிய அப்பா, மேலும், இங்கே இதற்கு மேல் உனக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்றும், இதுவரை கிடைத்ததே அந்த மனுஷனின் முகத்திற்காகத் தான் என்றும் சொல்லி விட்டாராம். மேலும், இருக்கிற இடத்திலேயே உன்னுடைய இடம் பறிபோய் வருகிறது. அதை முதலில் சரியாக தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய் என்றும் ரொம்பவே கனிவாக அட்வைஸ் செய்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











