வில்லன் நடிகருக்கு ஜோடியாக இரண்டு படம்... வலையில் சிக்காத பிரபல நடிகை!
சென்னை: சில்மிஷம் செய்யும் வில்லன் நடிகருடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தும் அவரது வலையில் சிக்காமல் கிரேட் எஸ்கேப்பாகி உள்ளார் அந்த வளர்ந்து வரும் நடிகை
இயக்குநர்,வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக செய்து அதில் பெஸ்ட் என பெயர் எடுக்கும் இந்த நடிகர் 50வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.

படவாய்ப்பு இல்லை: டாப் நடிகர்களை வைத்து ஹிட் படங்களை எடுத்த இவர், ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்தார். இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே நடித்தார். ஆனால், அந்த படங்கள் சரியாக போகாததால் அந்த திறமையான நடிகருக்கு படவாய்ப்பே இல்லாமல் போனது. இதனால், சினிமாவை விட்டு கொஞ்ச காலம் காணாமலே போய்விட்டார்.
மிரட்டலான வில்லன்: அதன்பின், எப்படியோ முட்டிமோதி மீண்டும் சினிமாவில் வில்லனாக என்ட்ரி கொடுத்து தொடர்ந்து பல படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த படங்கள் சக்கைப்போடு போட்டு வருவதால், அந்த திறமையான நடிகருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

அட்ஜஸ்ட்மென்ட்: திறமையான நடிகராக இவர், தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளை சில்மிஷம் செய்யும் விஷயத்திலும் திறமையானவர். அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் தன்னுடன் சேர்ந்து நடிக்க முடியும் என்று பல நடிகைகளுக்கு ஆர்டர் போட்டு இருக்கிறார். இதனால், நடிகைகள் பலர் இவர் படத்தில் இருந்து விலகிய சம்பவம் கூட நடந்துள்ளது.
கிரேட் எஸ்கேப்: அப்படிப்பட்ட சில்மிஷ நடிகருடன் இரண்டு படத்தில் ஜோடியாக நடித்த அந்த பிரியமான நடிகை கொஞ்சம் கூட வளைந்து கொடுக்காமல் கிரேட் எஸ்கேப்பாகி உள்ளார். அவரிடம் சேட்டை செய்துவிடாதீர்கள், வேறு ஹீரோயின் இந்த கதைக்கு செட்டாகாது என்று படக்குழு கெஞ்சி கேட்டுக்கொண்டதால், அந்த திறமையான நடிகர் வாலை சுருட்டி வைத்திருந்ததாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











