»   »  சங்க தலைவருக்கு சரியான நோஸ் கட் கொடுத்த வாரிசு நடிகை

சங்க தலைவருக்கு சரியான நோஸ் கட் கொடுத்த வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடந்த போராட்ட மேடையில் சங்க தலைவருக்கு நோஸ் கட் கொடுத்துள்ளார் வாரிசு நடிகை.

தமிழக மக்களின் நலனுக்காக போராடுகிறோம் என்று கூறி திரையுலகினர் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மவுன அறவழிப் போராட்டத்தை நடத்தினார்கள்.

போராட்டத்தில் இரண்டு தமிழ் நடிகைகளை தவிர இளம் தலைமுறை ஹீரோயின்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதில் போராட்ட மேடைக்கு வந்த நாட்டாமை மகள் அங்கிருந்த சீனியர்கள் ஒவ்வொருவரையாக சந்தித்து வணக்கம் தெரிவித்தார், கை கொடுத்தார்.

ஒரு சீனியர் நடிகரை கட்டிப்பிடித்தார். அந்த சீனியருக்கு அருகில் நின்ற தனது முன்னாள் காதலரான சங்க தலைவரை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

சங்க தலைவர் நின்ற இடத்தில் இருந்து யு டர்ன் போட்டு வேறு பக்கம் சென்றுவிட்டார் வாரிசு நடிகை. காதல் முறிவுக்கு பிறகு வாரிசு நடிகை சங்க தலைவரை கண்டுகொள்வது இல்லை.

சங்க தலைவரோ தற்போது அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை ஒருவருடன் ஊர் சுற்றுவதாக கூறப்படுகிறது.

English summary
A young actress has ingnored her former boy friend at a protest conducted by Kollywood celebrities in Chennai on sunday over Cauvery and Sterlite issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X