வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை?
சென்னை: இளம் நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து வாரிசு நடிகையை மனதில் வைத்து கூறியது என்று பேச்சு கிளம்பியுள்ளது.
கஷ்டப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார் அந்த தமிழ் பேசும் நடிகை. வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். அம்மணிக்கு நல்ல நடிப்புத் திறமை இருந்தும் இன்னும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில், கமர்ஷியல் பட இயக்குநர்களின் முதல் தேர்வு நான் இல்லை. அதை பற்றி கவலையும் இல்லை. இரண்டு பாட்டுக்கு ஆடிவிட்டு, நான்கு காதல் காட்சிகளில் வரும் வழக்கம் எனக்கு பிடிக்கவில்லை என்றார்.
அவர் அண்டை மாநிலத்தில் இருந்து வந்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள அந்த வாரிசு நடிகையை தான் அப்படி விளாசியுள்ளார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
முன்னதாக பட விழா ஒன்றில் நடிகை சும்மா பேசிய பேச்சால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் தன் பேச்சுக்காக அவர் மன்னிப்பும் கேட்டார். தற்போது அவர் ஏதோ மனதில் பட்டதை பேச அதுவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாவம், அடுத்தடுத்து ஏதாவது வம்பில் சிக்கிக் கொள்கிறாரே.


Click it and Unblock the Notifications











