»   »  சம்பளத்தை சர்ரென்று உயர்த்திய நடிகை... ஒரு ஹிட்டுக்கே இப்படியா?

சம்பளத்தை சர்ரென்று உயர்த்திய நடிகை... ஒரு ஹிட்டுக்கே இப்படியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வளரும் இளம் நடிகருடன் தான் நடித்த மாயாமான படம் ரசிகர்களை மாயம் செய்ய பெரிதும் தவறியதால் சற்று வருத்தத்தில் இருந்தார் அந்த வாரிசு நடிகை.

இந்நிலையில் நீண்ட மாதங்களாக கிடப்பில் கிடந்த முருகனான அந்தப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Young Actress Increase Salary

இதில் கைக்காசை செலவு செய்த நடிகரை விட நடிகைதான் மிகுந்த பலனைப் பெற்று வருகிறார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும் வேகமாக தனது சம்பளத்தையும் அவர் உயர்த்தி விட்டதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.இதனால் தங்களது அடுத்தடுத்த படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனராம்.

இந்நிலையில் உண்மை நிலவரம் வேறுமாதிரியாக இருக்கிறது. அதாவது நடிகை தனது சம்பளத்தை அவரே உயர்த்தவில்லையாம்.

சிவமான நடிகர் படத்தில் இவரின் நடிப்பையும், கிடைத்த வரவேற்பையும் பார்த்து தயாரிப்பாளர்களே இவரின் சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்க முன் வந்துள்ளார்களாம்.

அந்த படத்திற்குப் பின் தொடர்ந்து இவருக்கு படங்கள் குவிந்து வருவதால் தங்களது படத்தில் அவரை எப்படியேனும் நடிக்க வைக்க வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

இதுதான் நடிகையின் திடீர் சம்பள உயர்விற்குக் காரணமாம். 'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டு கொட்டும்'கிற பழமொழி நடிகையோட விஷயத்துல சரியாத்தான் இருக்குன்னு கிசுகிசுக்குது கோலிவுட் வட்டாரம். அதுசரி!

English summary
After a Huge hit Heir Actress Rapidly Raising her Salary, had been Wounded in a Speech Widely in film Circles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil