»   »  காதலருடன் லிவ் இன் முறைப்படி வாழும் ஒல்லியின் தோழியான வாரிசு நடிகை

காதலருடன் லிவ் இன் முறைப்படி வாழும் ஒல்லியின் தோழியான வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒல்லி நடிகரின் பாலிவுட் தோழி தனது காதலருடன் லண்டனில் லிவ் இன் முறைப்படி வாழ்வது பற்றி இந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒல்லி நடிகர் முதன்முதலாக பாலிவுட் சென்றபோது அவருக்கு ஜோடியாக வாரிசு நடிகை நடித்தார். அந்த படத்தில் நடித்தபோது ஒல்லியும், வாரிசு நடிகையும் நண்பர்களாகிவிட்டனர்.

வாரிசு நடிகை லண்டனில் வசிக்கும் ஒருவரை காதலித்து வருகிறார். ஆனால் இதை அவர் ஒருபோதும் ஒப்புக் கொண்டது இல்லை. இந்நிலையில் லண்டன் திரைப்பட விழாவுக்கு சென்ற நடிகை ஹோட்டலில் தங்கவில்லையாம்.

மத்திய லண்டனில் உள்ள தனது காதலரின் வீட்டில் தங்கி லிவ் இன் முறைப்படி அதாவது திருமணமாகாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறாராம். அவர் இன்னும் எத்தனை நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என தெரியவில்லை.

இந்நிலையில் வாரிசு நடிகையின் லிவ் இன் முறையை பற்றி தான் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

English summary
Olli actor's Bollywood friend is reportedly living with her alleged boyfriend in Central London. This is sort of live-in relationship.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil