Don't Miss!
- News
ஒடிசா அமைச்சர் நபா தாஸ் மறைவால் வேதனை.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
- Finance
அதானி குழும பங்குகள் வரும் நாட்களிலும் சரியுமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஷூட்டிங் போகாமல் குடித்து விட்டு கும்மாளம் போடும் இளம் நடிகை.. பறிபோன பட வாய்ப்பு!
சென்னை: நல்லா நடிக்கிறாரே என இளம் நடிகை ஒருவருக்கு திடீரென சில பட வாய்ப்புக்ள் கிடைத்தன. ஆனால், புகழ் போதை தலைக்கு ஏறி விட்ட நிலையில், மது போதைக்கு அடிமையாகி விட்டாராம் அந்த இளம் நடிகை.
எப்படியாவது பெரிய படங்களில் நடிக்க வேண்டும் என பல முயற்சிகள் செய்து வந்த அந்த இளம் நடிகை சாதிக்க வேண்டிய சரக்கு பாட்டிலுடன் ஹோட்டல் அறையிலேயே சாய்ந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமிட்டான ஒரு சில படங்களிலும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு செல்வதே இல்லையாம்.
படமே
ஓடல..
35
கோடி..
40
கோடி
என
வாய்க்கூசாம
கேட்கிறாங்களே..
போட்டி
நடிகர்களால்
புலம்பும்
கோலிவுட்!

குதிரைக் கொம்பு
சினிமா பட வாய்ப்புகள் கிடைப்பதே பெரிய குதிரைக் கொம்பாக உள்ளது. ஏகப்பட்ட செலவு செய்து இளம் நடிகைகள் போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி பொங்க போட்டோக்களாக பதிவிட்டு சினிமா வாய்ப்புகளை தேடி பிடித்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் போட்டோஷூட்களை போட்டே சினிமா வாய்ப்பை தட்டிப் பறித்தவர் தான் அந்த இளம் நடிகை.

ஹீரோயின் சான்ஸ் கிடைக்க
ஹீரோயின் சான்ஸ் கிடைக்க ஏகப்பட்ட பிரைவேட் பார்ட்டிகளுக்கு சென்று வந்த அந்த நடிகைக்கு ஒரு சில சூப்பரான வாய்ப்புகள் ரொம்பவும் சிரமப்படாமலே சீக்கிரத்தில் கிடைத்தது. ஆனால், தற்போது கிடைத்த வாய்ப்புகளில் கவனம் செலுத்தாமல் நடிகை மதுவுக்கு அடிமையாகி விட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன.

சரக்கும் கையுமாக
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லாமல் படப்பிடிப்பு இருக்கும் நாட்களிலும் தனது ஹோட்டல் அறையிலேயே சரக்கடித்து விட்டு மட்டையாகி விடுகிறாராம் அந்த இளம் நடிகை. மது போதையை தாண்டி போதைப் பழக்கத்திற்கும் அதிகளவில் அவர் அடிமையாகி வருகிறார் என அடுத்தடுத்த ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குடும்பத்தினர் கவலை
நடிகை இந்த வயதில் சினிமாவில் சாதிக்கப் போகிறார் என எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு திடீரென நடிகை ரூட்டை மாற்றி இப்படி குடித்து விட்டும் போதை மருந்துகள் எடுத்துக் கொண்டும் கும்மாளம் போட்டு வருவதை பார்த்து அவரது குடும்பத்தினரே வருத்தமடைந்து உள்ளார்களாம்.

பறிபோன வாய்ப்பு
நடிகையின் நடவடிக்கைகள் சுத்தமாக பிடிக்காத நிலையில், அவரை புக் செய்த இயக்குநர் ஒருவர் ஹீரோயினையே மாற்றி விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. இப்படியே நடிகை போதைக்கு அடிமையாகி இருந்தால், அவரது எதிர்காலம் அவ்வளவு தான் என்கின்றனர். நடிகைக்கு ரகசியமாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.