அந்த நடிகை திடீரென முடங்க காரணமே இதுதானா?.. டைரக்டர் பார்த்த வேலை.. பெரிய படம் போச்சே?
சென்னை: சம்பந்தமே இல்லாமல் யங் ஹீரோயின் இப்படி திடீரென முடங்கப் போவதாக அறிவிக்கிறாரே என்ன மேட்டர் என்று குழம்பிக் கொண்டிருந்த கோலிவுட்டுக்கு தற்போது வெளியான பகீர் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.
ஏற்கனவே அந்த டைரக்டருடன் இணைந்து மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த நடிகைக்கு கிடைக்க வேண்டிய பெரிய பட வாய்ப்பு ராசியான நடிகைக்கு கைநழுவி சென்ற காரணம் தான் நடிகை அப்படியே திடீரென முடங்க காரணம் என்கின்றனர்.

எப்படியாவது கோலிவுட்டில் ஒரு பெரிய நடிகர் படத்தையாவது பிடித்து விட முடியாதா? என நினைத்த நடிகைக்கு டைரக்டர் பார்த்த வேலையால் இப்படியொரு நிலைமை ஆகியுள்ளது என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
சைலண்ட்டாக முடங்கிய நடிகை: சீக்கிரமே வரப்போகும் அறிவிப்புக்குப் பிறகு பலரும் தன்னை தொடர்புக் கொண்டு டார்ச்சர் செய்வார்கள் என்பதை புரிந்துக் கொண்டே அந்த நடிகை திடீரென சைலண்ட்டாக முடங்கி விட்டாரா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. பெரிய படத்தில் நடிக்க நடிகைக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டிய நிலையில், கடைசியில் அவருக்கு அந்த ராசியில்லாமல் போனது ஏன் என்கிற கேள்வி கிளம்பிய நிலையில், சில பகீர் தகவல்களும் கசிந்துள்ளன.
வட போச்சே: பெரிய பட வாய்ப்பு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல வட போச்சே கணக்காக நடிகையை விட்டுச் சென்றதால் தான் நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் என்கின்றனர். ஏற்கனவே அந்த இயக்குநர் படத்தில் நடித்த நிலையில், மீண்டும் தனக்குத்தான் ஜாக்பாட் கிடைக்கும் என மனக் கணக்கு போட்டு வந்த நடிகைக்கு கடைசி நேரத்தில் டைரக்டர் பார்த்த வேலையால் எல்லாமே பீஸ் புடுங்கின பல்பு மாதிரி ஆகிவிட்டது என்கின்றனர்.
டைரக்டர் பார்த்த வேலை: புதிதாக பலரை தனக்கு துணையாக சேர்த்துக் கொண்ட டைரக்டர் தானே நடிப்பு டெஸ்ட் வைக்காமல் தனது டீமில் இருந்த சிலரை அந்த வேலையை பார்த்துக் கொள்ள சொல்லிய நிலையில், அந்த கவர்ச்சி நடிகை அவர்களுக்கு முன்னால் வந்து சரியாக பர்ஃபார்மன்ஸ் செய்யவில்லை என்றும் அதன் காரணமாகவே செலக்ட் ஆகவில்லை என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
வேறு சில மேட்டர்களும்: ஆனால், நடிகை பற்றி பரவும் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை என்றும் இவர் வேண்டாம் என பெரிய இடத்து உத்தரவு வந்த நிலையில் தான் டைரக்டர் ஆளை மாற்றிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications