»   »  அறிமுக நடிகர்களுடன் ஜோடி சேரமாட்டேன்... இளம்நடிகையின் பிடிவாதம்

அறிமுக நடிகர்களுடன் ஜோடி சேரமாட்டேன்... இளம்நடிகையின் பிடிவாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிடைத்த படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்த அந்த பரதேசி நடிகை தற்போது பெரிய நடிகர்களின் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாராம்.

சிறிய வேடத்தில் அறிமுகமாகி தனது நடிப்புத் திறமையால் முன்னுக்கு வந்த நடிகை தற்போது பெரிய நடிகரின் மகளாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அறிமுக நடிகர்களுடன் ஜோடி சேரமாட்டேன் என்று நடிகை அடம்பிடித்து வருகிறாராம். காரணம் என்னவென்று விசாரித்தால் மேற்படி நடிகரின் மகளாக நடிப்பதால் இனிமேல் பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் வாய்ப்பளிப்பார்கள்.

எனவே இப்போதிருந்து அறிமுக நடிகர்கள் மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை தவிர்ப்பது நல்லது என்ற முடிவிற்கு நடிகை வந்து விட்டாராம்.

பெரிய நடிகரின் மகளாக நடிப்பதற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று இதனைக் கேள்விப்படுபவர்கள் வியப்பில் ஆழ்கின்றனராம்.

English summary
Young Actress New Policy Recent Time She says "i don't Act with Debutante Actors''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil