அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நான் தான்.. பட வாய்ப்புகளை அள்ளிக் குவிக்க பலே திட்டம் போடும் இளம் நடிகை!
சென்னை: வளரும் நடிகை ஒருவர் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களை கைப்பற்றி வரும் நிலையில், கோலிவுட்டில் பெரிய அளவில் இடத்தை பிடிக்க பலே திட்டம் போட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனியர் நடிகைகளுக்கு எல்லாம் வயதாகி வரும் நிலையில், பல இளம் நடிகர்களுடன் நடிக்க அவர்கள் விருப்பப்பட்டாலும், அந்த நடிகைகளுடன் இணைந்து நடிக்க நடிகர்கள் விருப்பம் தெரிவிப்பதில்லை.

இந்நிலையில், ஏற்கனவே இருக்கும் இளம் நடிகைகள் பெரிதாக கோலிவுட்டில் ஷைன் ஆவாததை புரிந்துக் கொண்டு பக்கத்து ஸ்டேட்டில் இருந்து அந்த அழகிய நடிகை அசத்தல் என்ட்ரி கொடுக்க பலே வேலைகளை பார்த்து வருவதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.
வளரும் நடிகை: சமீப காலமாக சட சடவென பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த இளம் நடிகை. முன்னணி நடிகர்கள் படத்தில் ஈஸியாக அவருக்கு வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. பல ஆண்டுகளாக கோலிவுட்டில் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் பல இளம் நடிகைகளுக்கு கிடைக்காத அளவுக்கு வாய்ப்புகள் எப்படி அந்த பக்கத்து ஸ்டேட் பாப்பாவுக்கு கிடைக்கிறது என்கிற கேள்விகள் நடிகைகள் மத்தியிலேயே எழுந்துள்ளது.
அடுத்த லேடி சூப்பர்ஸ்டார்: அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நடிகர்கள் அலைமோதும் நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் இடத்துக்கும் இளம் நடிகைகள் சமீப காலமாக போட்டிப் போட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும், அந்த டைட்டிலை இந்த இளம் நடிகை தான் டார்கெட் செய்து இருக்கிறார் என்றும் பரபரப்பான பேச்சுக்கள் இண்டஸ்ட்ரியில் கிளம்பி உள்ளன.
வாய்ப்புகள் எப்படி கிடைக்கிறது?: திடீரென அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்கள் படங்களை அந்த இளம் நடிகை எப்படி பிடிக்கிறார் என்பதே புரியாத புதிராக இருப்பதாக பலரும் பேசிக் கொள்கின்றனர். இப்போதைக்கு அதிக சம்பளம் வாங்காமல், சொன்ன நேரத்தில் ஷூட்டிங் வருகிறார் என்றும் அதிக டேக்குகள் எடுக்காமலும் தயாரிப்பாளர் பர்ஸுக்கு தேவையில்லாத வேட்டு வைக்காமல் இருக்கிறார் என்பதாலே அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிவதாக கூறுகின்றனர்.

அந்த ஆசை இருக்கு: கோலிவுட்டில் அடுத்த டாப் ஹீரோயின் என்கிற இடம் காலியாகவே இருக்கு என்றும் 20 ஆண்டுகளாக சில முன்னணி நடிகைகளே இன்னமும் லீடிங்கில் இருந்து வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அந்த இடத்தை பிடிக்கும் ஆசை அந்த நடிகைக்கு அதிகமாவே உள்ளதாகவும், அதை காரணமாக வைத்தே பல படங்களில் தற்போது செம சைலன்ட்டாக எந்தவொரு ஆர்ப்பாட்டமும் பிரச்சனையும் பண்ணிக் கொள்ளாமல் நடித்து வருகிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











